அளவுக்கு மீறி அதிகாரம் குவிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

1 Min Read

சென்னை, டிச.15 நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரங்களை யும் மத்தியில் குவிக்கும்வேலையை பாஜக அரசு செய்துவருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் நேற்று (14.12.2023) நடைபெற்றது. நிகழ்ச் சியில், எழுத்தாளர் கி.ரமேஷ் எழு திய பி.ராமமூர்த்தியின் வரலாற்று சுருக்கம் அடங்கிய புத்தகத்தை மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட பி.ராமமூர்த்தியின் மகள்கள் வைகை, பொன்னி ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, கார்ப்பரேட் – மதவாத கூட்டணி, இந்திய அரசமைப்பு சட்ட ஜனநாயகம் சீர்குலைப்பு என்ற தலைப்பில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:

இந்தியாவை அதன் தன்மையை பாதுகாக்க வேண்டிய சூழல் தற் போது நிலவி வருகிறது. அண்மை யில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வரும் காலங்களில் தமிழ்நாடுகூட பிரிக் கப்படலாம். இவ்வாறு நீதித்துறை உட்பட அனைத்தின் அதிகாரத் தையும் மத்தியில் குவிக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது. இத்தகைய போக்குக்கு எதிராகதொடக்க காலத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் பி.ராமமூர்த்தி. அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தமிழ்நாடு பல்வேறு விடயங்களில் முன்னுதாரணமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு பாஜக எம்.பி.யைகூட வெற்றி பெறச் செய்யவில்லை என்ற பாரம்பரியம் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலிலும் அது தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “நாடாளுமன்றம், சட்டப்பேரவை போன்றவற்றில் பி.ராமமூர்த்தியின் உரைகளை புத்த மாக்கும் பணிகளை மேற் கொண்டு வருகிறோம். அவற்றில் எப்படி மார்க் சிஸ்ட் குரல் கொடுத்தது என்ப தற்கான ஆவண மாக அதுஇருக்கும். அதேநேரம், ஆண்டுதோறும் பி.ராமமூர்த்தி நினைவு சொற்பொழிவு நடை பெறும்” என்றார். நிகழ்ச்சியில், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் அய்.ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *