‘தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள்’ – வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, அக்.27 தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (27.10.2023) வெளியிடப்பட் டுள்ளது.  அதன்படி தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதி காரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். 

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர் களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

தமிழ்நாடு முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடி பேர், பெண்கள் 3.10 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 18,016 பேர் உள்ளனர். 

அதிகபட்சமாக சோழிங்கநல் லூரில் 6.52 லட்சம் வாக்காளர்களும் குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். 

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 

நவ. 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளன. வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடக்கும் இந்தச் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். 

விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிச. 9-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தப் படிவங்கள் அனைத் தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இறுதி வாக் காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார்.  மேலும் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *