கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.10.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வளர்ச்சி முன்னேற்றம் எதுவும் இல்லாமல், ஹிந்துத்வா முழக்கத்தை முன் வைத்து மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? தலையங்கத்தில் கேள்வி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியா என்ற பெயரை மாற்றி பாரத் என்ற பெயரை பாடப்புத்தகங்களில் சேர்க்க முனையும் என்.சி.இ.ஆர்.டி. போக்கை எதிர்ப்போம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராஜஸ்தான் தேர்தலில் தோல்வி பயத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பாஜக கையாள்கிறது என முதலமைச்சர் கேலாட் கண்டனம்.
* 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் அறிவித்ததற்கு லாலு பிரசாத் பாராட்டு
தி இந்து:
* தமிழ்நாட்டில் ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகளுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க சவால்கள் என்ன? என்பது குறித்து ராமகிருஷ்ணன் விரிவான கட்டுரை
தி டெலிகிராப்:
* வணிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வசதி படைத்த முதியவர்களுக்கு வழங்கப்படும் உயர்தர மற்றும் அதிக விலை கொண்ட வந்தே பாரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல ரயில்களை நிறுத்தி வைக்கும் ரயில்வேயின் நடைமுறைக்கு கேரளாவில் தினசரி பயணிகள் எதிர்ப்பு
* கோவில்களை சுற்றி இருக்கும் தாடி, தொப்பி வைத்துள்ளவர்கள் அடிக்கப்படுவார்கள் என ஜார்க்கண்ட் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குஷ்வாஹா சஷி பூஷன் மேத்தா அடாவடி பேச்சு.
* சந்திரயான் -3 பற்றிய குறிப்பில் புராணங்களையும் அறிவியலையும் சேர்ப்பது தவறல்ல. புராணங்கள் புதுமை மற்றும் புதிய அறிவை வழிநடத்தும் கருத்துக்களை வழங்குகிறதாம்? – ஒன்றிய கல்வி அமைச்சகம் விளக்கம்.
– குடந்தை கருணா