சென்னை, நவ.25- தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (24.11.2023) தண்டையார் பேட்டை பட்டேல் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் ரூ.246 கோடியே 10 லட்சம் மதிப்பில், 5 லட்சத்து 46 ஆயிரத்து 676 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இதில், முதல் கட்டமாக இந்த திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 200 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி களை வழங்கினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் பள் ளிப் படிப்பை முடித்து உயர் கல்வி யில் சேருபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. இது நூறு சதவீதமாக உயர வேண்டும். மாண வர்களாகிய உங்களுக்கு பெரிய சொத்து என்பது கல்விதான் அதில், கவனம் வைத்து படியுங்கள்.
விளையாட்டிலும் ஆர்வம் காட்டி உங்கள் திறமையை வெளிக் கொண்டு வாருங்கள்’’ என்றார். இதனை தொடர்ந்து, கொருக்குப் பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்த மான இடத்தில் 10 கோடி மதிப்பில் பல்வகை விளையாட்டுகளை உள் ளடங்கிய விளையாட்டு வளாகம் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவிற்கு ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் தலைமை வகித்தார். இதிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பின்னர், அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜா கண்ணப்பன், பி.கே. சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலா நிதி வீராசாமி, சட்டமன்ற உறுப் பினர்கள் ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், அய்ட்ரீம் மூர்த்தி, மாவட்ட செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.