மண்ணின் மைந்தர்களுக்கு எதிரானவையே மனுஸ்மிருதி –
ராமாயணங்கள் எல்லாம்! வெறுப்பைப் பரப்புவதே ஆர்.எஸ்.எஸ். பணி!
பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பீகார் கல்வி அமைச்சர் சாட்டை அடி!
பாட்னா, ஜன. 14 – மனுஸ்மிருதியும், ராமசரிதைகளும் இந்த நாட்டின் ஆதிகுடிகளான தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரானவை என்று பீகார் கல்வி யமைச்சர் சந்திரசேகர் பேசியுள்ளார். மேலும், இவை மக்களி டையே வெறுப்பை பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.
பீகார் கல்வி அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சந்திரசேகர், நாளந்தா திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழா வில் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார். அப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
‘‘ராமாயண காவியத்தை அடிப் படையாகக் கொண்ட துளசிதாசர் எழுதிய ராமசரித்மனாஸ் கவிதை சமூகத்தில் வெறுப்பைப் பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் குறிப்பிட்ட ஜாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது.
தாழ்த்தப்பட்டவர்கள், கல்வியைப் பெற்ற பின் பாம்பு களைப் போல ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள் என்று ராம்சரித்மனாஸ் கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ் மிருதி’ ஆகியவை சமூகத்தை பிளவு படுத்துகின்றன. அத னாலேயே தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள் மத்தியில் ராம்சரித் மனாஸுக்கு எதிர்ப்பு எழுந்தது. காவி சித்தாந்தவாதியான கோல்வால்கரின் ‘சிந்தனைக் கொத்து’ வெறுப்பைப் பரப்பும் நூலாகும்.
அதற்கு முன்பு, மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் ஆகியவை நாட்டில் வெறுப்பைப் பரப்பின. ஆனால், வெறுப்பு அல்ல, அன்புதான் நாட்டை ஒன்றிணைக்கிறது. இந்துக்களின் மரியா தைக்குரிய நூல்களான, மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் போன்றவை தாழ்த்தப் பட்டவர்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் கல்வி கற்கும் பெண் களுக்கு எதிரானவை. எனவே, ராம்சரித் மனாஸில் சமூகப் பாகுபாடுகளை அங்கீ கரிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் நீக்கப்பட வேண்டும்” என சந்திர சேகர் கூறியுள்ளார்.