நாகர்கோவிலில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாட்டுப் பணிகள் நடை பெற்று வருகின்றன. நிகழ்ச்சிக்கான நன்கொடை மற்றும் ‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா தொகையினை குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியத்திடம் குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் மாவட்ட அமைப் பாளர் பேராசிரியர் அ. சிதம்பரதாணு வழங்கினார். உடன் கழக குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன்.