ஒருவரது உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை சிறுநீரின் நிறத்தைக்கொண்டு அறியலாம். சிறுநீர் தெளிவாகவும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருப்பது இயல்பானது. அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது நீர் இழப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே பெண்கள் ஒரு நாளில் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். வழக்கமாக பருகும் தண்ணீரில் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, புதினா ஆகியவற்றை கலந்து பருகலாம். வெள்ளரியை அப்படியே மென்று சாப்பிடலாம்.