அருப்புக்கோட்டை கழகப் பொதுக்குழு உறுப்பினர் வெ.முரளி (எ) நாராயணசாமி அவர்களின் தாயார் வெ.பொன்னுத்தாய் அம்மாள் (வயது 97) 25.11.2026 புதன் பிற்பகல் 3 மணியளவில் வயது முதிர்வு காரணமாக முடிவெய்தினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், துணைத் தலைவர் கா.நல்லதம்பி, துணைச் செயலாளர் இரா.அழகர், ப.க. தலைவர் பூ.பத்மநாதன், நகரத் தலைவர் மு.முனியசாமி, ஒன்றியத் தலைவர் முத்துக்குமார், செயலாளர் இரா.முத்தையா, இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், மேனாள் நகரத் தலைவர் சு.செல்வராசு மற்றும் தோழர்கள் புளியம்பட்டி அன்னாரது இல்லம் சென்று, மலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். மதியம் 12 மணியளவில் இறுதி நிகழ்வு விருதுநகர் சாலை எரிவாயு மயானத்தில் எளிய முறையில் நடைபெற்றது.
