அறிவுடைமையானதா?
என்னை நாத்திகன் என்றும், மதத்துவேசி என்றும் பலர் சொல்லுகிறார்கள்; பலர் பேசியுமிருக்கிறார்கள். இந்தப்படி நாத்திகர்கள் என்பவர்கள் யாராவது கருதி இருப்பார்களானால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆத்திகர்கள் என்பவர்கள் கருதி இருப்பார்களானால் அவர்களுக்காகப் பரிதாபப்படுவதுடன் இந்த மாதிரி மக்களிடையில் இருக்க வேண்டி இருக்கிறதே என்று என்னையே நான் வருத்திக் கொண்டிருப்பேன். என்னை நாத்திகன், மதத் துவேசி என்று ஆத்திகன் சொல்லுவது மகா மகா அறியாமையும், அலட்சியப் புத்தியால் ஆகுமேயன்றி அறிவுடைமையால் ஆகுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
