ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் விரட்டியடித்த இலங்கைக் கடற்படை!

- Advertisement -

ராமேஸ்வரம், நவ.23 ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் சுற்றி வளைத்து இலங்கை கடற்படை விரட்டியடித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அக்வான்’ புயல் காரணமாக ஒரு வாரமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், நேற்று முன்தினம் 377 விசைப்படகுகளில் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் ஓலைக் குடா, தனுஷ் கோடி எதிரே இந்திய கடல் எல்லையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நண்பகலில் மன்னார் கடல் பகுதியில் இருந்து சிறிய ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டினர். பின்னர் இரவில் மீண்டும் வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் படகை சிறை பிடிக்கும் நோக்கில் படகுகளை சுற்றி வளைத்து விரட்டினர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள், வலைகளை மீன் களுடன் கடலில் வெட்டி விட்டு இலங்கை கடற் படை யின் பிடியில் சிக்காமல் தப் பினர்.இதில் 10க்கும் மேற்பட்ட வலைகள் கடலில் வீசப்பட்டது.

இதுகுறித்து கரைக்கு வந்த மீனவர் எபிஸ்டன் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால் 50க்கும் மேற்பட்ட படகுகள் கடும் நட்டத்தை சந்தித்தது. இலங்கை கடற்படை விரட்டியடிப்பு நிகழ்வு குறித்து மீன் வளத்துறை மற்றும் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *