அரியலூர் மாவட்டக் கழக மகளிரணி மேனாள் தலைவரும், ஜெயங்கொண்டம் நகர திராவிடர் கழகத் தலைவர் துரை.பிரபாகரனின் வாழ்விணையருமான வளர்மதி சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக நலிவுற்றிருந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
அவர் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகி யிருக்கும் இணையருக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– (கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: மருத்துவமனைக்கு உடற்கொடை வழங்கப்படுகிறது.
