பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும் வழிகள்

3 Min Read
- Advertisement -

குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்ய வேண்டும். இந்த காலத்துக்குள் பதிவு செய்ய முடியாவிட்டாலும் வாய்ப்பு இருக்கிறது. 21 நாட்களைக் கடந்தும் 30 நாட்களுக்குள் பதிவு செய்தால் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். 30 நாட்களைக் கடந்தும் ஓர் ஆண்டுக்குள் பதிவு செய்ய, உரிய அதிகாரியின் எழுத்துப்பூர்வ அனுமதி, தேவையான ஆவணங்கள் மற்றும் தாமதக் கட்டணம் தேவை.

ஓர் ஆண்டைக் கடந்த பிறப்பையும் பதிவு செய்யலாம். ஆனால் அதற்கான நடைமுறை, பிறப்பு நடந்த காலத்தைப் பொறுத்து மாறும். ஓர் ஆண்டுக்கு மேல் 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய, அந்தப் பகுதியின் மாவட்ட மாஜிஸ்திரேட், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட்டால் அதிகாரம் வழங்கப்பட்ட எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் உத்தரவு வழங்க வேண்டும்.

2 ஆண்டுகளை கடந்த பிறப்பை பதிவு செய்ய, அந்தப் பகுதியின் முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவு அவசியம். 2 நிலைகளிலும் பிறப்பு நடந்ததற்கான விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே பதிவு செய்யப்படும். இதற்கான விண்ணப்பத்தை பிறப்பு நடந்த இடத்துக்கான பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுகி அளிக்க வேண்டும்.

குழந்தை பிறந்தபோது பெயர் வைக்காமல் பிறப்பை பதிவு செய்திருந்தாலும், அதற்கு பிறகு பெயரை சேர்க்கலாம். பிறப்பை பதிவு செய்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெயரை இலவசமாக சேர்க்கலாம். அதற்கு பிறகு 15 ஆண்டுகளுக்குள் பெயரை சேர்க்க தாமதக் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.

15 ஆண்டுகளை கடந்த சில பழைய பதிவுகளுக்கும் தமிழ்நாடு அரசு, பிரத்யேகமான கால அவகாசத்தை வழங்கியிருந்தது. அந்த அவகாசமும் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. அதனால் இப்போது 15 ஆண்டுகளை கடந்த பதிவுகளுக்கு பெயர் சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இப்போதுள்ள நடைமுறையை உறுதி செய்ய வேண்டும்.

தவறு திருத்தம்

குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அப்பா அல்லது அம்மா பெயரில் எழுத்துப் பிழை இருந்தால் திருத்தம் கோரலாம். பிறப்பை பதிவு செய்தபோதே பெற்றோர் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். குழந்தையின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக பிறப்பு பதிவு செய்யப்பட்ட பகுதியின் பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுக வேண்டும். ஆவணங்களை சரிபார்த்த பிறகு பதிவாளர் உரிய முடிவு எடுப்பார். ஆனால் பெற்றோர் பிறகு தங்கள் பெயரை மாற்றிக்கொண்டால், அந்த மாற்றத்தை மட்டும் வைத்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழிலும் பெயரை மாற்ற முடியாது. இதற்கென உள்ள தனி நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் 2018 ஜனவரி 1 முதல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு விவரங்களை crstn.org வெப்சைட்டில் தேடி சான்றிதழை டவுன்லோடு செய்யலாம். ஒருவேளை பழைய பதிவு வெப்சைட்டில் கிடைக்காவிட்டால் பிறப்பு நடந்த இடத்துக்கான உள்ளாட்சி அலுவலகத்தை அணுக வேண்டும்.

அய்க்கிய அரபு நாடுகளில்
வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அய்க்கிய அரபு நாடுகளில் பணியாற்ற எலெக்ட்ரிக்கல் உதவியாளர், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரிக்கல் ஃபிட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னீசியன், எலெக்ட்ரிக்கல் ஃபோர்மேன், எலெக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர், ஆபரேஷன் & பராமரிப்புப் பொறியாளர், டெஸ்டிங் & கமிஷனிங் பொறியாளர் தேவை.

இப்பணிகளுக்கு ரூ.32 ஆயிரம் முதல் ரூ.2.86 லட்சம் வரை ஊதியம். விருப்பம் உள்ளோர் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு டிச.5-க்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *