உலகின் 10 டன் எடையுள்ள முதல் முழு மின்சாரப் பயணிகள் விமானத்தை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி சீனா புதிய வரலாறு படைத்துள்ளது.
விமானியின் கட்டுப்பாட்டில், விமானி இல்லாமலும் தானியங்கி யாகவும் செயல்படும் திறன் கொண்ட இந்த நவீன விமானம், விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் அரசு விமானத் தயாரிப்பு நிறுவனமான ‘கோமாக்’, உலகப் புகழ்பெற்ற பேட்டரி தயாரிப்பு நிறுவனமான
சி.ஏ.டி.எல், ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ‘CE-25A’ என்ற இந்த நவீன மின்சார விமானத்தை வடிவமைத்துள்ளன.

400 கிலோ மீட்டர் தடையின்றிப் பயணிக்கலாம்!
10 டன் எடை கொண்ட இந்த விமானத்தில் 19 பயணிகள் வரை பயணிக்க முடியும்.
வேகம் மற்றும் தூரம்: மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இது, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் தூரம் வரை தடையின்றிப் பயணிக்கும்.
வழக்கமான விமான எரிபொரு ளுக்குப் பதிலாக, இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சாரப் புரொப்பல்லர்கள் மூலம் இது இயங்குகிறது. சுமார் 2,400 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆளில்லா தானியங்கி சோதனை ஓட்டத்தைத் தொடங்கிய CE-25A விமானம், இதுவரை 19 ஆளில்லா சோதனைப் பயணங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பின்சோவ் நகரில், இரண்டு விமானிகள், ஒரு பொறியாளருடன் தனது முதல் மனித இயக்க சோதனைப் பயணத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.
நகரங்களுக்கு இடையிலான குறுகிய தூரப் பயணங்களுக்காகப் தனித்துவமாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த மின்சார விமானத்திற்கு வணிக ரீதியான அனுமதி பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அனுமதி கிடைத்தவுடன், எதிர்வரும் சீனப் புத்தாண்டு அன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் வணிகப் பயணத்தைத் தொடங்க இந்த விமானம் தயாராக உள்ளது.
