1.82 லட்சம் ரயில்வே ஊழியர்களிடம் ஏழைகளுக்கான குடும்ப அட்டை இருந்தது அம்பலம்!

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 16- பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர் களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இது சரியான பயனாளி களுக்குதான் வழங்கப் படுகிறதா என்று ஒன்றிய உணவு, பொது விநியோகத் துறை ஆய்வு மேற்கொண்டது. இதில், 1.82 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இந்த அட்டையை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரயில்வே மண்டல பொது மேலாளர்கள், உற்பத்திப் பிரிவு ஊழியர்களுக்கு ரயில்வே வாரியம் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது:

பெரும்பாலான மாநில, யூனியன் பிரதேச அரசு விதிகளின்படி, அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு சலுகையும் பெறத் தகுதியற்றவர்கள். அந்த வகையில், ரயில்வே ஊழியர்களும் சலுகைகள், மானியங்களைப் பெற தகுதியற்றவர்கள் என்பதால், அந்த குடும்ப அட்டையைப் பயன்படுத்த வேண்டாம் என அவர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளை திருப்பித் தருமாறு அறிவுறுத்த வேண்டும்.

ரயில்வே ஊழியர்கள் இந்த அட்டை மூலம் சலுகைகள், மானியங்களைப் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய, வேண்டும். சலுகைகளைப் பெறவில்லை என்றால், அதுதொடர்பான உறுதிமொழிப் படிவத்தை சம்பந்தப்பட்ட ஊழியர் களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

சராசரியாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரை மாத ஊதியம் பெறும் ரயில்வே ஊழியர்கள் ஏழை களுக்கான குடும்ப அட்டை வைத்திருப்பது ஒன்றிய அரசின் ஆய்வு மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க மூத்த தலைவர் மனோகரன் கூறியபோது, “முழுமையான விசாரணை, சரியான நெறிமுறை இல்லாமல் குடும்ப அட்டை விநியோகிப்பதே இதற்கு காரணம். இருப்பிடச் சான்று உள்ளிட்ட பல வற்றுக்கும் அது ஓர் அடையாள அட்டையாக இருப்பதால்கூட ரயில்வே ஊழியர்கள் வாங்கி இருக் கலாம். எனவே, மானியம் இல்லாத அட்டைவழங்கிய பிறகு, இதை திரும்பப் பெறலாம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *