ஜவகர்லால் நேரு 1947 முதல் 1964 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் (பிரதமர்) ஆவார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் நாளில் பிறந்தார். இவருடைய பிறந்த நாளே இந்தியாவில் “குழந்தைகள் நாளாக” கொண்டாடப்படுகின்றது.
ஜவஹர்லால் நேரு அறிவியல் மனப்பாங்கை மக்களிடையே வளர்க்க வேண்டும் என்று வலியுறுத் தினார். அவர் மூடநம்பிக்கைகள், புராணங்கள் மற்றும் பழைமைவாதச் சிந்தனை களை எதிர்த்து கேள்வி கேட்பது, பகுத்தறிவு மற்றும் சான்றுகள் அடிப்படை யிலான சிந்தனையை ஊக்குவித்தார். இதை அவர் “மனித முன்னேற்றத்திற்கு அடிப் படை” என்று கருதினார்.
நேரு இந்தியாவை ஒரு தொழில்மயமான நாடாக மாற்றுவதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார். அவர் பொதுத்துறை நிறுவனங் களையும், கனரகத் தொழில்களையும் மேம்படுத்தி, இந்தியாவின் பொருளாதார சுயசார்பை வலுப்படுத் தினார். எஃகு ஆலைகள், அணு ஆராய்ச்சி மய்யங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவை அவரது தொலைநோக்கு முயற்சிகளின் விளைவாகும்.
நேரு மதம், சடங்குகள் மற்றும் பிற பழை மைவாத நடைமுறைகளால் அறிவியல் முன் னேற்றம் தடைபடக் கூடாது என்று கருதினார். அவர் அறிவியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
இவர் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் நாளில் தமது 75 ஆம் வயதில் மறைவுற்றார்.
lll
l உலக சர்க்கரை நோய் விழிப் புணர்வு நாள் இன்று (நவம்பர் 14, 2026)

