சென்னை, நவ.14– பெரியார் என பெயர் சூட்டப்பட்ட நாளை நினைவு கூர்ந்து நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி பெரியார் பங்களிப்புக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர்களின் பதிவு வருமாறு:– ஆயிரமாண்டுகளாக மக்கள் ஏங்கிய சமூக விடுதலைக்கான போராட்டத்துக்கு விதையிட்டவர் தந்தை பெரியார். பெண்ணுரி மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அவருக்கு, 1938-ஆம் ஆண்டு இதே நாளில்(13.11.2026) நடைபெற்ற தமிழ்-நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நீலாம்பிகை அம்மை யார், அன்னை மீனாம் பாள், மருத்துவர் தருமாம்பாள் உள் ளிட்ட திராவிட இயக்கத்தின் பெண் முன்னோடிகள் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினர்.
தந்தை பெரியாரின் சிந் தனைகள் தமிழ்ச் சமூகத்துக்கு இன்னும் பல தலைமுறை களுக்கு வழிகாட்டும். ஜாதி ஒழிப் புக்காகவும், பெண் விடுதலைக் காகவும் அவர் முன்னெடுத்த சமரசமற்ற போராட்டத்தைத் தொடர்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
