தமிழ்நாட்டின் மூன்று கடற்கரைகளுக்கு முதன்முறையாக நீலக் கொடி அங்கீகாரம்

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 14- தமிழ் நாட்டின் மூன்று கடற்கரைகளுக்கு முதன்முறையாக பன்னாட்டு நீலக்கொடி அங்கீகாரம் கிடைத் துள்ளது. அதில், கோவளம் கடற்கரை தொடர்ந்து ஆறாவது முறையாக அங்கீகாரத்தைத் தக்க வைத்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு அரசு, கடலோரச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தகு சுற்றுலா மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி கடற்கரை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேசு வரம் கடற்கரை மற்றும் ராம நாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியமான் கடற்கரை ஆகிய மூன்று கடற்கரைகளுக்கு 2026-2027ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க பன்னாட்டு நீலக் கொடி அங்கீகாரத்தினை முதன் முறையாக வழங்கியுள்ளது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரை தனது நீலக்கொடி அங்கீகாரத்தைத் தொடர்ந்து ஆறாவது முறையாகப் புதுப்பித்துத் தக்கவைத்துள்ளது.

நீலக்கொடி அங்கீகாரம் என்பது உலகளவில் கடற்கரை களுக்கு வழங்கப்படும் அங்கீகரிக் கப்பட்ட சுற்றுச்சூழல் தரச் சான்றாகும். கடற்கரைகளின் தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, குளிப்பதற்கான கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட 33 பன் னாட்டுத் தரநிலைகளின் அடிப் படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்தத் தரநிலைகள் தொடர்ந்து பின் பற்றப்படுகின்றனவா என்பதை தேசிய மற்றும் பன்னாட்டு மதிப்பீட்டுக் குழுக்கள் ஆய்வு செய்த பின்னரே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு, ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரை களின் எண்ணிக்கை நான் காக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நீலக் கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் முன் னணி இடத்தைப் பெற்றுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *