பெரியார் கல்வி நிறுவன மாணவர் தேசிய மலையேற்றப் பயிற்சி முகாமில் பங்கேற்பு

2 Min Read
- Advertisement -

திருச்சி, நவ. 14- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவன் பா.பிரவீன் தேசிய மாணவர் படையின்  கருநாடகா மற்றும் கோவா தேசிய மலை யேற்றப் பயிற்சி முகாமில் கலந்துகொள்கிறார்

தேசிய மாணவர் படையின் (NCC) சார்பில் மாணவர்களிடையே சாகச உணர்வு, தலைமைப் பண்பு மற்றும் உடல் உறுதியை வளர்க்கும் வகையில் நடத்தப்படும் அகில இந்திய தேசிய மலையேற்றப் பயிற்சி முகாமிற்கு (All India Trekking Camp), திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு NCC மாணவன் பா.பிரவீன் பெருமையுடன் தேர் வாகிப் பங்கேற்க உள்ளார்.

கருநாடகா மற்றும் கோவா என்.சி.சி இயக்குநரகத்தின் சார்பில், பெலகாவி (Belagavi) பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடர்களில் இந்த மலையேற்றப் பயிற்சி முகாம் வருகிற நவம்பர் 15, 2026 முதல் நவம்பர் 22, 2026 வரை மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது.

இந்தக் கடினமான மற்றும் சாகசம் நிறைந்த மலையேற்றப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பா.பிரவீன் வருகிற நவம்பர் 13, 2026 இன்று திருச்சியிலிருந்து செல்கிறார். முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்து, அனைத்து சாகசப் பயிற்சிகளையும் முடித்துக்கொண்டு அவர் நவம்பர் 25, 2026 அன்று மீண்டும் திருச்சி திரும்புகிறார்.

இளம் வயதிலேயே NCC அமைப்பின் மூலம் தேசிய அளவிலான மலையேற்றப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ள மாணவன் பா.பிரவீன் மற்றும் அவருக்கு மிகச் சிறப்பாக பயிற்சி வழங்கிய பள்ளியின் தேசிய மாணவர் படையின் பொறுப்பாசிரியர் மனோன்மணி ஆகியோரை, பெரியார் கல்வி நிறுவனங் களின் தாளாளர்,  முதல் வர், தேசிய மாணவர் படை அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் சக மாணவர்கள் மிகுந்த பெருமிதத்தோடு பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித் துள்ளனர்.

மாணவர்களின் கல்வியோடு கூடிய தலைமைத்துவப் பண்பை வளர்க்கும். திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை வீரர்கள் இதுவரை 10 பேர் தேசிய அளவிலான பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *