பஹ்ரைனில் அமெரிக்க ரேடாரை அழித்தது ஈரான்

1 Min Read
- Advertisement -

துபாய் நவ. 14- பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடாரை அழித்ததாக ஈரானின் புரட்சிகரப் காவல் படை தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் தொடங்கிய வான்வழிப் போரின்போது அமெரிக்கத் தாக்குதல் களுக்கு பதிலடியாக பஹ்ரைன் உட்பட அண்டை அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. மேலும் பன்னாட்டு எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் எண் ணெய் கப்பல்களையும் குறிவைத்துத் தாக்கி வரு கின்றது.

இந்நிலையில் ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ”தெற்கு ஈரான் துறைமுகமான சிரிக்கில் உள்ள தொலைத் தொடர்பு கம்பத்தின் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தியது.இதனை தொடர்ந்து பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பின் மீது ஈரான் புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளது.

ரேடார் மீதான தாக்குதல் அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என் பதற்கான ஒரு கடுமையான எச்சரிக்கை என்றும் அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

மேலும் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்றபோது பெட்ரோலிய எரிவாயு கப்பல் ஒன்று கண்ணிவெடியில் மோதி சேதமடைந்ததாகவும் ஈரான் புரட்சிகர காவல் படை தெரிவித்தாக செய்தி நிறுவனம் குறிப் பிட்டுள்ளது.

நீரிணையின் கிழக்குப் பகுதியை கடக்கும்போது கப்பல் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை புறக் கணித்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *