ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை அதிகரிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read
- Advertisement -

மதுரை, நவ. 12- ஊழல் வழக்குகளை காலக்கெடுவுக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஷாகுல் அமீது என்பவர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள தன் மீதான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் ஊழல் வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்வதன் மூலம் பொது நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதாகும். எனவே ஊழல் வழக்குகளின் விசாரணை முடிந்தளவு தினமும் நடத்தப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் விசாரணையை முடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

எனவே, ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முன்மொழிவு மீது உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், பணியாளர்கள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்த உயர் நீதிமன்ற நிர்வாகத்துக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

சிறப்பு நீதிமன்றங்களில் போதுமான அரசு வழக்குரைஞர்கள் நியமனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி, முடிந்த வரை அன்றாடம் விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். மனுதாரரின் வழக்கை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *