சென்னை, நவ.11 தமிழ் நாட்டில் உள்ள அரசுத் துறைகளில் லஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க புதிய தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழ் நாட் டில் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் எவரேனும் லஞ்சம் கேட்டால் அது குறித்த புகார்களைத் தெரிவிக்க 94444 42519 என்ற மொபைல் எண் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்களது புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் (E-Mail) முகவரியின் மூலமாகவும் தெரிவிக்கலாம் என சி.பி.அய். தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள் பொதுமக்களின் கைப் பேசி எண்களுக்கும் குறுஞ் செய்தியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
