சென்னை, நவ. 12 – தமிழக வெற்றிப் பயணத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பீட்டைச் சந்திக்க துவங்கியுள்ளன. இது போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பயத்தையும், கவலை யையும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் விழுப்புரம், கும்ப கோணம், மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி என மொத்தம் 6 போக்குவரத்து மண்டலங்கள், மாநில விரைவு போக்கு வரத்துக் கழகம், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் என 8 பிரிவுகள் உள்ளன. நாள்தோறும் 19,283 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் சராசரியாக ஒரு கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதன்மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் வந்து கொண்டிருந்தது.
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ‘விடியல் பயணம்’ என்கிற பெயரில் மாநகர, நகர மற்றும் கிராமப்புற பேருந்துகள் என 7714 பேருந்துகளில் மட்டும் கட்டண மில்லாமல் பெண்கள் பயணம் செய்தனர். த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில், தொலைதூர, சொகுசு, ஏசி பேருந்துகள் தவிர மீதியுள்ள 12,695 பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
பெண்களுக்கான இலவசப் பய ணத்தை நடைமுறைப்படுத்தும் முன்பு மாணவர்களுக்கு, மாற்றுத்திறனாளிக ளுக்கு, மூத்த குடிமக்களுக்கான இலவச பயணத் திட்டம் மட்டும் நடைமுறையில் இருந்தன. அப்போது போக்குவரத்துக் கழகத்தின் நாள்தோறும் வருவாய் ரூ.45 முதல் ரூ.47 கோடி வரை இருந்தன. பெண்களுக்கான இலவசப் பயணம் நடை முறைப்படுத்திய போது போக்குவரத்து கழகங்கள் பெரும் நட்டத்தை சந்தித்தன. அதனால் ஏற்படும் இழப்பை ஈடு கட்டும் வகையில் அரசின் சார்பில் நாள்தோறும் மானியமாக 25 கோடி ரூபாய் போக்குவரத்துக் கழகத்துக்குத் தரப்பட்டது. இருந்தும் நாள்தோறும் 10 கோடி ரூபாய் வரை நட்டத்தைச் சந்தித்துள்ளன.
த.வெ.க. ஆட்சியில் வெற்றிப் பய ணம் நடைமுறைப்படுத்திய பின்னர் நாள்வதோறும் வருவாய் அதிகபட்சம் ரூ.9 கோடி வரை வருகிறதாம். பெரும்பாலும் ரூ.7 கோடியை தாண்டுவதில்லை யாம். இதனால் நாள்தோறும் இழப்பு ரூ.40 கோடியாகிவிட்டது. த.வெ.க. அரசு சார்பில் போக்குவரத்துக் கழகங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தரப்பட்ட அதே ரூ.25 கோடி தான் மானியமாக தரப்படுகிறதாம். இதனால் நாள்தோறும் ரூ.20 கோடி வரை நட்டத்தில் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகளை இயக்கிவருகின்றன.
பேருந்துகள் குறைப்பு!
அரசு போக்குவரத்துக் கழகம் நாள்தோறும் இயங்க சுமார் 19 கோடி ரூபாய் செலவாகிறது. அதில் டீசல் மட்டும் ரூ.16.17 கோடிக்கு வாங்கப்படுகிறது. பேருந்துகள் பராமரிப்புக்காக ரூ.2.35 கோடி செலவிடப்படுகிறது. இப்போது தினசரி செலவுகளுக்கு கூட டிக்கெட் வழியாக வருமானம் வரவில்லை என்கிறார்கள். இதனாலேயே மண்டலங்கள் அள வில் வருவாய் இல்லாத வழித்தடங்க ளில் வாரத்தில் 3 நாட்கள், 4 நாட்கள் பேருந்துகள் இயக்குவது நிறுத்தப்பட்டன. விழுப்புரம் கோட்டத்தில் மாவட்ட அளவில் திரு வண்ணாமலையில் 34, கடலூரில் 28, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 26 பேருந்துகள், வேலூர் 23, காஞ்சிபுரம் 15, திருவள்ளுர் 10 பேருந்துகள் என 136 பேருந்துகள் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் இயக்குவது நிறுத்தப்பட்டது.
கடும் விமர்சனத்துக்குப் பின்னர் மீண்டும் அந்த பேருந்துகள் இயக்கப்படு கின்றன என்கிறார்கள் விழுப்புரம் மண்டல அதிகாரிகள். அதேநேரத்தில் சத்தமில்லாமல் பேருந்துகள் குறைக்கப்பட்டதோடு, குறு கிய தூரப் பேருந்துகள் தொலைதூர பேருந்து களாக மாற்றப்பட்டுள்ளன என்கிறார்கள்
மானியத்தொகை வழங்கப்படவில்லை!
இதுகுறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத்தலைவர்களில் ஒருவரான சவுந்தர்ராஜனிடம் கேட்டபோது, “போக்குவரத்துக் கழகத்தில் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகி றார்கள். தி.மு.க. ஆட்சியில் விடியல் பயண திட்டம் அறிமுகப்ப டுத்தும்போதே தோராய கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ.1200 கோடி நிதியை எங்களுக்கு தந்தது அரசு. அதன்பின் 3 மாதத்துக்கு ஒருமுறை நிதி தந்துவந்தது. அந்த நிதியை வைத்து அப்போது புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. இப்போது த.வெ.க. ஆட்சியில் வெற்றிப் பயணம் திட்டத்துக்கு, இதுவரை 3 மாதத்துக்கு ஒருமுறை தரவேண்டிய மானியத் தொகை யைக்கூட அரசு வழங்கவில்லை.
தொழிலாளர்கள் புலம்பல்!
பெரும்பாலும் ஒப்பந்தப் பணி யாளர்களை வைத்து போக்குவரத்துக் கழகம் இயங்கிவருகிறது. டெக்னிக்கல் ஊழியர்கள் கிடையாது. டீசல் தரும் நிறுவனங்களுக்கு பணம் தரவில்லை. பேருந்துகளுக்கு டயர் வாங்கிப்போட பணமில்லை என்பதால் ரீட்ரேடிங் டயர் போட்டு பேருந்தை ஒட்ட சொல்கிறார்கள். ரீட்ரேடிங் டயர்களை பயன்படுத்தினால் பெரும் விபத்துகள் ஏற்படும் எனச் சொன்னாலும் கேட்ப தில்லை. தொழிலாளர் சங்கங்களிடம், தொழிலாளர்கள் பிரச்சினைகள், குறித்து எதுவும் கலந்து ஆலோசனை செய்வதில்லை. அமைச்சர் விஜய் தமிழன்பார்த்திபன் ஆய்வு செய்யவில்லை. எங்கள் பிரச்சினையை யாரிடம் போய் சொல்வது எனத் தெரியாமல் இருக்கிறோம்’’ என்றார்.
