கொல்கத்தா, நவ.9- மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்திருந்த புரட்சியாளர் விளாதிமீர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜியாஜங் சிறீபத் சிங் கல்லூரி முன்பு நிறுவப்பட்டிருந்த ரஷிய புரட்சியாளர் விளாதிமீர் லெனின் சிலை, கடந்த மே மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு, மேற்கு வங்கத்தில் புதியதாக ஆட்சி அமைத்துள்ள பாஜகதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், பாஜக தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன.
இந்த நிலையில், உடைக்கப்பட்டிருந்த லெனின் சிலை யானது கடந்த 6.11.2026 அன்று நள்ளிரவு சில நபர்களால் அங்கிருந்த அகற்றப்பட்டுள்ளது. இதுபற்றி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக் கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரையில் சிலையை அகற்றியது யார் என்பது தெரியவரவில்லை. ஆனால், பாஜக ஆட்சி அமைந்தது முதல் அங்கிருந்து லெனின் சிலை அகற்றப்பட்டு மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜியின் சிலை அமைக்கப்படும் எனச் செய்திகள் பரவி வந்தன.
கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய சிபிஎம் தலைமையிலான மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட லெனின் சிலையை, குடியரசுத் தலைவர் விருதுபெற்ற சிற்பி மிருகாங்க பால் வடிவமைத்து உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வெடிக்கப் போகும் போர்
மக்களுக்கு அயோடின்
மாத்திரைகள் வழங்கிய ஈரான்!
மாத்திரைகள் வழங்கிய ஈரான்!
டெக்ரான், நவ. 9- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் அணுசக்தி நிலையங்களுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அல்ஜசீரா வெளியிட்ட செய்தியில், ஈரானில் அணுசக்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அயோடின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை இனி நம்ப முடியாது என்றும், அவர் எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்தலாம் என்றும் அந்த அதிகாரி கூறியதாக அல்ஜசீராவின் செய்தி தெரிவிக்கிறது.
பொதுவாக அணுசக்தி நிலையங்களைச் சுற்றி 2 முதல் 3 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மக்களுக்கு, போர் பதற்றம் அதிகரிக்கும் காலங்களில் இதுபோன்ற மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் கதிரியக்க அயோடின் தைராய்டு சுரப்பியைப் பாதிக்காமல் தடுப்பதற்காக பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அணுசக்தி மய்யம் மீது
தாக்குதல் நடத்த திட்டமா?
தாக்குதல் நடத்த திட்டமா?
இதற்கிடையே, ஈரானின் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி மய்யங்களில் ஒன்றான ‘பிகாக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, கடந்த 5.11.2026 அன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்புக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
