தஞ்சை, நவ. 9- தஞ்சாவூர் மாவட்ட,மாநகர திராவிடர் கழக பொறுப்பாளர்களின் அவசர கலந்துரையாடல் கூட்டம் நேற்று (8.11.2026) மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது
தஞ்சை மாநகர தலைவர் செ.தமிழ்ச்செல்வன் கடவுள் மறுப்பு கூறினார்
மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் கூட்டத்தின் நோக்கம் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பு குறித்தும் தொடக்க உரையாற்றினார்
மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார்கோயில் வெ. நாராயணசாமி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவு தாசன், புதிய பேருந்து நிலையப் பகுதி செயலாளர் சாமி.கலைச்செல்வன், விடுதலை வாசர் வட்ட செயலாளர் ஏ.வி..என் குணசேகரன், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் ச.சந்துரு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பொன்னரசு, பூதலூர் ஒன்றிய செயலாளர் அல்லூர் இரா.பாலு, மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் இரா.சரவணக்குமார், மாவட்ட இளைஞரணி தலை வர் ஆ.பிரகாஷ், புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் வெ.துரை, தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன், தஞ்சை மாநகர செயலாளர் இரா. வீரக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் குழந்தை. கவுதமன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சிந்தனைஅரசு, பேராசிரியர் கு.குட்டிமணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஆ. லட்சுமணன்,விடுதலை வாசகர் வட்ட உறுப்பினர் குழந்தைசாமி, ஈ. பி. காலனி பகுதி செயலாளர் இரா.பரந்தாமன், மாநில பகுத்தறிவு ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம், மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர் இறுதியாக மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமை உரை ஆற்றினார் மாநகர செயலாளர் இரா.வீரக்குமார் நன்றி கூறினார்
இரங்கல் தீர்மானம்
அம்மாபேட்டை ஒன்றியம் கம்பர்நத்தம் வி.கிருஷ்ணமூர்த்தி, ஒரத்தநாடு ஒன்றியம் வடசேரி பொதுக்குழு உறுப்பினர் வடசேரி ஞானசிகாமணி அவர்களின் சகோதரர் தீ.வ.உலக நாதன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண்ணன் அவர்களின் தாயார் விஜயா, சாலியமங்கலம் பெரியார் தொண்டர் வரதராஜன் அவர்களின் வாழ்வியணையர் வசந்தா பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன் அவர்களின் மாமியார் சுகந்தி அவர்களின் தாயாருமான மலர்கொடி ஆகியோர் மறைவிற்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது
தீர்மானங்கள்
2026 நவம்பர் 14 தஞ்சையில் நடைபெறும் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவதெனவும் தஞ்சையில் தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பு அளித்த தமிழ தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிப்பதுடன் தலைமைச் செயற்குழுவில் பங்கேற்க வருகைதரும் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதென முடிவு செய்யப்படுகிறது
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சுயமரியாதை நாள் டிசம்பர் 2 அன்று சென் னையில் நடைபெறும் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தாக்களை வழங்கி வாழ்த்தி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் குருதிக்கொடை வழங்குவது உடற்கொடை வழி கொடைக்கான பதிவுகளை செய்வது மரக்கன்று நடுவது தெருமுனைக் கூட்டங்கள் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தஞ்சை மாவட்டத் தில் மாநகரம் மற்றும் அனைத்து ஒன்றியங்களில் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது
மாணவர் பருவம் தொட்டு தந்தை பெரியார் கொள்கையை மாணவர்களிடம் பரப்பும் பணியை மேற்கொன்டும் தஞ் சையில் பெரிய பேசுகிறார் நிகழ்ச்சியை நூற்றுக்கு மேல் நடத்திய சாதனைக்கு அடித்தளமாக விளங்கிய பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆசிரியர் கோபு.பழனிவேலுக்கு தீந்தமிழர் பேரியக்கம் சார்பில் பெரியார் விருது பெற்ற மைக்கும் திருவையாறு அவ்வைக் கோட்டம் சார்பில் நடந்த நிகழ்வில் மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார் கோயில் வெ.நாராயண சாமி அவர்களுக்கு அவ்வையார் விருதும் மாவட்ட தலைவர் சி.அமர்சிங்குக்கு சிறந்த வழக் கறிஞர் விருதும் பெற்றமைக்காக தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டி பெருமை கொள்கிறது
கூட்டத்தில் பெரியார் நடை மற்றும் குடும்ப விழா, தீபாவளி கொண்டாடலாமா? என்ற தலைப்புகளில் மிகச் சிறப்பான பாடலை வெளியிட்டு சிறப்பித்த மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தனுக்கும் விருது பெற்றவர்களுக்கும் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக் கப்பட்டது.
