தஞ்சை, நவ. 9- பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல் அவர்களுக்கு “பெரியார் விருது” வழங்கியதற்கு கழகப் பொறுப்பாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 31.10.2026 அன்று மாலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் “தீந்தமிழர் பேரியக்கம் ” நடத்திய முதல் மாநில மாநாடு, செம்மொழி கலை இலக்கிய மாநாடு – செம்மொழி விருதுகள் (2026 )வழங்கும் நிகழ்வு அமைப்பின் நிறுவனத் தலைவர் தோழர் செ.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேலுக்கு “தந்தை பெரியார்” விருதினை தீந்தமிழர் பேரியக்கம் சார்பில் வழங்கினர்.
“பெரியார் விருது” பெற்றதைப் பாராட்டி திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராம லிங்கம், மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி, புதிய பேருந்து நிலையப் பகுதிசெயலாளர் வெ. துரை, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், குழந்தைசாமி பேராசிரியர் குட்டிமணி, சிங்கப்பூர் தொழிலதிபர் ரமேஷ் மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட், பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன் உள்ளிட் டோர் நூல்கள் வழங்கி பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் ப.சாந்தி, ப.யாழிசை இருந்தனர்.
