இங்குள்ளவர்களுக்கு கொண்டாட்டம் அவர்களுக்குத் திண்டாட்டம் மோசமான காற்றுச்சூழலால் விளையாட மறுத்த இந்தோனேசிய வீராங்கனை

- Advertisement -

சென்னை, நவ.9 சென்னையில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் மோசமான காற்றுத் தரச் சூழலிலும் டென்னிஸ் போட்டிகளை நடத்த முயன்ற அமைப்பாளர்கள் மீது, இந்தோனேசிய வீராங்கனை ஜானிஸ் ஜென் பகிரங்கமாக தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, நேற்று (8.11.2026) நடைபெறவிருந்த சென்னை ஒப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டி இன்றைய நாளுக்கு (9.11.2026) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அளவு அதிகரித்து, காற்றுத் தரம் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அப்பகுதியில் நிலவிய ஆபத்தான காற்றுச் சூழலையும் பொருட்படுத்தாமல், போட்டியைத் தொடர்ந்து நடத்த அமைப்பாளர்கள் முனைப்பு காட்டியதாகத் தெரிகிறது.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்தோனேசிய வீராங்கனை ஜானிஸ் ஜென், “மோசமான காற்றுச்சூழலில் நாங்கள் விளையாட மாட்டோம்; இன்னும் நாங்கள் விளையாட வேண்டும் என்கிறீர்களா?” என்று போட்டி அமைப்பாளர்களிடம் கேள்வி எழுப்பி தனது கடுமையான கண்டனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

வீராங்கனைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி எழுப்பப்பட்ட இந்த திடீர் எதிர்ப்பை அடுத்து, நேற்று நடைபெறவிருந்த இறுதிப் போட்டியை உடனடியாக நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, அச்சுறுத்தலான காற்றுச் சூழல் காரணமாக நேற்று திட்டமிடப்பட்டிருந்த இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“நமக்கு கொண்டாட்டம், அவர்களுக் குத் திண்டாட்டம்” என்ற நிலையில்தான் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படு வதாக விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இச்சம்பவம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *