கோடைக்கால மின் தேவையைச் சமாளிக்க நடவடிக்கை வெளிச்சந்தையில் இருந்து 17,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 9- தமிழ்நாட்டில் எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய மின் தேவையை முழுமையாகச் சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான 5-ஆம் குறுகிய கால ஒப்பந்தத்தை  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் மொத்தம் 17,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை உள்ள உச்ச மின் தேவை காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக வெளியிட்டுள்ள 5-ஆம் ஒப்பந்தம் இதுவாகும்.

கோடை மற்றும் விழாக் காலங்களில் மாநிலத்தில் தடையற்ற சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதும், பொதுமக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் எந்தவித மின் தடையையும் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாகவும் இந்த கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.

மின் உற்பத்தியை உயர்த்தும் அதேவேளையில், தேவைக் காலத்தில் தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய அரசு இந்த நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *