துறையூரில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கேள்வி கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய சட்டப் பேரவை துணைத் தலைவர்!

- Advertisement -

திருச்சி, நவ. 9- திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதி கண்ணபிரான் காலனிப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பொதுமக்களின் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, கள நிலவரத்தை அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரும், அப்பகுதியைச் சேர்ந்த கார்த்தியும் நேரில் முறையிடச் சென்றபோது, துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத் தலைவருமான க.ரவிசங்கர் மற்றும் அவரது தரப்பினர் கேள்வி கேட்டவர்களை கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

கண்ணபிரான் காலனி பகுதியில் பல நாட்களாகக் குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். அத்தியாவசியத் தேவையான குடிநீர் விநியோகம் சீராக இல்லாதது குறித்து அதிகாரிகளிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் முறையிட அப்பகுதி மக்கள் முற்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், இப்பிரச்சினை குறித்து நேரில் ஆய்வு செய்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடக வியலாளர்களும் அப்பகுதி மக்களும் நிலைமையை எடுத்துரைக்க முயன்றுள்ளனர்.

குடிநீர் விநியோகம் குறித்து கேள்வி எழுப்பி முறையிடச் சென்ற  ஊடகவியலாளர்களையும், மக்களையும் துணை அவைத் தலைவர்  ரவிசங்கரும், அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதம் முற்றித் தாக்கியதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப் பட்டதாகக் கூறப்படும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் குறைகளைக் கேட்க வேண்டிய ஒரு மக்கள் பிரதிநிதியே, தட்டிக் கேட்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள செயல் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பி யுள்ளது.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ஊடகவியலாளர் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங் களைத் தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *