செய்யாறு பெரியார் பெருந்தொண்டர் தாடி பா.அருணாசலம் நூற்றாண்டு நிறைவு நாள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

1 Min Read
- Advertisement -

செய்யாறு, நவ. 7- திருவண்ணா மலை மாவட்டம், செய்யாறு பெரியார் பெருந்தொண்டர் மறைந்த தாடி பா.அருணாசலம் நூற்றாண்டு நிறைவு நாள நிகழ்வு 6.11.2026 காலை 8.30 மணிக்கு செய்யாறு தந்தை பெரியார் சிலை அருகில் சிறப்பாக நடைபெற்றது.

தாடி அருணாசலம் குடும்பத்தின் சார்பாக மாவட்ட கழகத் தலைவர் அ.இளங்கோவன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சிறப்பாக அலங்காரம் செய்யப் பட்ட பெரியார் பெருந்தொண்டர் தாடி பா.அருணாசலம் படத்திற்கு நூற்றாண்டு நிறைவு வாழ்த்தொலி முழங்க தோழர்கள் மலர் தூவி மரியாதை செய்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செய்யாறு நகர கழகத் தலைவர் தி.காமராசன், மாவட்ட துணைத் தலைவர் சேத்துப்பட்டு அ.நாகராசன், மாவட்டச் செயலாளர் பொன்.சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் என்.வி.கோவிந்தன், நகர இளைஞரணித் தலைவர் ந.சீனுவாசன், நகரச் செயலாளர் தங்கம் பெருமாள், கஜபதி, அரக்கோணம் மாவட்ட துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன், படிகலிங்கம் துணி கடை அதிபர் ரொட்டேரியன் தி.மணி, பிரபல பல் மருத்துவர் தி.ரமேஷ், பெருங்களத்தூர் சிவ குமார், ஆகாஷ், பிரதீப், மாவட்ட இளைஞரணித் தலைவர் அரவிந்த், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வெங்கடேசன், சிறுநல்லூர் டி.சின்னதுரை, பி.ராஜேந்திரன், வடமணப்பாக்கம் மு.வெங்கடேசன், பொக்கைசமுத்திரம் பரந்தாமன், பாடி சவுண்ட் சர்வீஸ் டி.குமாரசாமி, செய்யாறு சப்ளையர் ஜெயக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி.வெங்கட்ராமன், பேரா.மு.தமிழ்மொழி, செய்யாறு லயன் சங்கத் தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *