கோவையில் நவம்பர் 1ஆம் தேதி மாநில அளவில், 200க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட, முதலாம் (1ஆம்) மாநில மாஸ்டர்ஸ் தரவரிசை (Ranking) டேபிள் டென்னிஸ் போட்டி, நடைபெற்றது. சென்னை வீரர் இரா. எத்திராஜன் லீக் போட்டியில் சுப்பையா (கோவை) (3-0) மற்றும் ஏழுமலை (ஸ்டேட் பேங்க்) (3-0), வீரர்களை வென்று கால் இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றார். கால் இறுதி போட்டியில் திப்ஜிட் முகர்ஜி (மகாராட்டினம்) 3-0, அரை இறுதியில், சுரேஷ் (மதுரை) 3-1 என்ற செட்களில் எத்திராஜன் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் எத்திராஜன் (சென்னை) 3-2 என்ற செட்களில் ராஜிவ் ஷா (கோவை) அவர்களை வென்று எத்திராஜன் வாகையர் கோப்பையை, வென்றார். தமிழ்நாடு டேபிள் சங்க தலைவர் சிறீதர் பரிசுகளை வழங்கினார்.
டேபிள் டென்னிஸ் போட்டியில் சைதை இரா.எத்திராஜன் வெற்றி
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
