தலைமைச் செயலாளர் தலைமையில் முதலீடுகளை ஈர்க்க ஆணையம் அமைப்பு!

- Advertisement -

சென்னை, நவ. 7- தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரித்து, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தலைமை செயலாளர் தலைமையில் புதிய முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், 19 அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆணையத்தில் இடம்பெற உள்ளனர்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கு வதற்கு முதலீட்டாளர்கள் பல்வேறு துறைகளின் அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் காலதாமதம் மற்றும் நிர்வாக சிக்கல்களைக் குறைத்து, முதலீட்டு திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலாளர் தலைமையில் செயல்படும் இந்த ஆணையத்தில் தொழில், நிதி, வர்த்தகம், மின்சாரம், சுற்றுச்சூழல், நில ஒதுக்கீடு உள்ளிட்ட துறைகளின் 19 அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். வர்த்தக துறை செயலாளர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *