நீதியின் குரல்: வெறுப்பு அரசியலுக்கு எதிராக அமெரிக்காவில் ஒலித்த மக்கள் அதிகாரம்!

- Advertisement -

சரா

வெறுப்பு அரசியல், இனவாதம், நிறவெறி மற்றும் மேலாதிக்கப் போக்கு களுக்கு எதிராக அமைதியும் ஜனநாயகமும் விரும்பும் அமெரிக்க மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அரசியல் மாற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் (US Midterm Elections), அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ‘குடியரசுக் கட்சி’க்கு பலத்த அடியைக் கொடுத்து, நாடாளுமன்றத்தின் (அமெரிக்க காங்கிரஸ்) பெரும்பான்மையைக் கைப்பற்றி ‘ஜனநாயகக் கட்சி’யினர் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தல் வெற்றி என்பது வெறும் ஆட்சிப் போட்டி அல்ல; பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகளுக்காகவும், லத்தீன் அமெரிக்க சமூகங்களின் கண்ணியத்திற்காகவும், பல்கலைக்கழகங்களில் அறவழியில் குரல் கொடுத்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நீதிப் போராட்டத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய சமூக நீதிக்கான வெற்றியாகும்.

  1. இனவெறி, மதவெறிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அரசியலில் அதிகரித்து வந்த இஸ்லாமோஃபோபியா (இஸ்லாமிய எதிர்ப்பு), குடியேறிகளுக்கு எதிரான நிறவெறி மற்றும் சிறுபான்மையினரை ஒதுக்கும் ஆதிக்க மனப்பான்மை – இவைகளுக்கு மக்கள் தமது வாக்குகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

மிச்சிகன் நிலப்பரப்பில் புதிய வரலாறு

மிச்சிகன் மாநிலத்தில் போட்டியிட்ட அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed) வரலாற்றுச் சாதனை படைத்து, அமெரிக்க செனட் அவைக்குத் தேர்வான முதல் முஸ்லிம் பிரதிநிதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். டிரம்ப் மற்றும் வலதுசாரி அமைப்புகளின் தீவிரமான இனவெறிப் பிரச்சாரங்களை முறியடித்து எல்-சயீத் பெற்ற இந்த வெற்றி, அமெரிக்கா அனைத்து மக்களுக்குமானது என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.   பழங்குடி மற்றும் கருப்பினப் பெண்களின் எழுச்சி: ஜார்ஜியா மற்றும் மினசோட்டா போன்ற மாநிலங்களில் பழங்குடியின மற்றும் கருப்பினப் பெண்கள் வெற்றி பெற்று நாடாளுமன்ற மற்றும் ஆளுநர் பதவிகளை அலங்கரிக்கின்றனர். மினசோட்டாவில் பெக்கி பிளானகன் (Peggy Flanagan) வெற்றி பெற்று முதல் அமெரிக்க பழங்குடியின பெண் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

வாசிங்டன் அரசியல் வரலாற்றில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளுக்கும், போர் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா வழங்கி வந்த நிபந்தனையற்ற ஆதரவை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதிநிதிகள் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளனர்.

இஸ்ரேலிய ஆதரவு நிதியத்தை (AIPAC) தகர்த்த வெற்றி

இஸ்ரேலிய சார்பு ஆதரவுக் குழுக்கள் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து முடக்க நினைத்த முற்போக்கு வேட்பாளர்கள் அனைவரும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

ரஷிதா த்லைப் மற்றும் இல்ஹான் உமர்: பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதிநிதியான ரஷிதா த்லைப் (Rashida Tlaib) மற்றும் சோமாலிய வம்சாவளிப் பிரதிநிதி இல்ஹான் உமர் (Ilhan Omar) ஆகியோர் தங்களுக்கு எதிராக வீசப்பட்ட அனைத்து வெறுப்புப் பிரச்சாரங்களையும் மீறி மீண்டும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

காஸா களத்தில் சேவையாற்றிய மருத்துவருக்கு வெற்றி

காஸா போர்முனையில் தன்னார்வ மருத்துவராகச் சென்று காயமடைந்த பாலஸ்தீன மக்களுக்குச் சிகிச்சையளித்த டாக்டர் ஆடம் ஹமாவ் (Adam Hamawy) போன்ற மனிதநேயப் போராளிகளும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்க உரிமைப் போராட்டமும், சமூக நீதியும்!

அமெரிக்காவில் குடியேறிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு எதிராகவும், லத்தீன் அமெரிக்க (Latino/Hispanic) சமூகங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் அமோக ஆதரவு வழங்கியுள்ளனர்.

நியூஜெர்சி, நியூமெக்சிகோ மற்றும் டெக்சாஸ் போன்ற மாநிலங்களில் லத்தீன் அமெரிக்கப் பின்னணி கொண்ட முற்போக்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நியூயார்க்கில் போட்டியிட்ட டேரியாலிசா அவிலா செவாலியர் (Darializa Avila Chevalier) மற்றும் கிளாரி வால்டெஸ் (Claire Valdez) ஆகியோர் உழைக்கும் வர்க்கம், தொழிலாளர் உரிமை மற்றும் குடியேறிகளின் உரிமைகளுக்காகப் போராடி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நீதிப் போராட்டத்தின் குரல்கடந்த காலங்களில் பாலஸ்தீனத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா, ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களும் மாணவர்களும் முன்னெடுத்த அமைதிப் போராட்டங்களை அரசாங்கம் ஒடுக்க நினைத்தது.

ஆனால், அந்த பல்கலைக்கழக ஆர்ப் பாட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற இளம் தலைவர்களையும், பேராசிரியர்களின் மனித உரிமை நிலப்பாட்டையும் ஆதரித்து அமெரிக்க மக்கள் வாக்களித்துள்ளனர்.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் பேராசிரியர்களும் கல்விச் சமூகமும் ஏந்திய நீதியின் சுடரை, இந்த தேர்தல் முடிவு பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

ஒரு புதிய அரசியல் விடியல்: இந்த இடைக்காலத் தேர்தல் வெற்றி என்பது ஏகாதிபத்தியத்திற்கும், பேரினவாதத் திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் அமெரிக்க மக்கள் வழங்கிய தெளிவான எச்சரிக்கையாகும். போர்க்களத்திற்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்திவிட்டு, நாட்டின் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் மனித நேயப் பணிகளுக்கு அமெரிக்க மக்களின் வரிப்பணம் செலவிடப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை இப்போது நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

வெறுப்பைக் கடந்து மனிதநேயமும், சமத்துவமும், ஒடுக்கப்பட்டோருக்கான குரலும் வெல்லும் என்பதற்கு இந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவு ஒரு சகாப்த சான்றாகும்.

குடியரசுக் கட்சியின் பின்னடைவு

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றியைப் பெற்று, நாடாளுமன்றத்தைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுவாக, அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் ஆளும் கட்சி பின்னடை வைச் சந்திப்பது வழக்கம். ஆனால், டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறை வடைந்துள்ள நிலையில், இந்த முறை குடியரசுக் கட்சி சந்தித்துள்ள தோல்வி வழக்கமான பின்னடைவைக் காட்டிலும் மிக அதிகமானது.

இனவெறி, நிறவெறி மற்றும் மதவெறி ஆதிக்க வெறிக்கு எதிராக நின்ற அமெரிக்க மக்கள், பாலஸ்தீன ஆதரவு மற்றும் உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்த சூழலில், இந்தத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க அரசியலில் மிக முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *