இளையோர் பங்களிப்பு!

- Advertisement -

ஜப்பான் டோக்கியோவில் அய்ந்தாவது பெரியார் பன்னாட்டமைப்பு மனிதநேய மாநாடு அக்டோபர் 11, 12 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது! BRIDGE – Building Rational Inclusive Democratic Global Equalty என்கிற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. ஜப்பானில் வாழும் தமிழ் உணர்வாளர்கள், 2024 ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஜப்பானியப் பயணத்திற்குப் பின் இந்த மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு உழைத்தனர். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தான்சானியா மற்றும் இந்தியாவின் மும்பை, தமிழ்நாடு எனப் பல்வேறு இடங்களில் இருந்து பேராளர்கள் பங்குபெற்றனர்.

கனிமொழி ராசாத்தி கருணாநிதி, ஜெ.ஜெயரஞ்சன், முன்னாள் அமைச்சர் டி.ஆர்பி.ராஜா, வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும் அமெரிக்கப் பேராசிரியர் ராம் மகாலிங்கம், இலண்டன் முனைவர் விக்னேசு ராசாமணி, மும்பை குமணராசன், மலேசிய கோவிந்தசாமி, தான்சானியா பாலசுப்பிரமணியன், மராத்திய ரேகா தாக்கூர், மருத்துவர் சரோ இளங்கோவன், பேரா. விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஜப்பானில் எதற்காக இந்த மாநாடு?  பெரியாரின் மனிதநேயம்  உலகளாவியது என்பன குறித்துப் பலரும்  சிறப்பாக எடுத்துரைத்தனர்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பயின்று, தமிழ்ப் பெண்ணை வாழ்விணையராக ஏற்ற புகாவோ சுனிச்சி சான், ஜப்பான் மனிதநேய அமைப்பின் தலைவர் கோரோ ஒசிடொ ஆகியோரும் உரையாற்றினர்.

ரமோன் மகாசேசே விருது பெற்ற பெசவாடா வில்சன் உரைக்கு அனைவரும் எழுந்து நின்று கரவொலியுடன் பாராட்டினர்.

சிறப்பாக இளையோர் பங்களிப்புப் பாராட்டத்தக்கது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் ஜப்பானில் வாழும் இளைய தலைமுறையினர் அழகுத் தமிழிலும், ஜப்பானிய மொழியிலும் அறிமுகம் செய்தனர். அமெரிக்க இளையோர் நிவிதா, அமரன் ஆகியோர் திருக்குறளை மேற்கோள் காட்டி எதிர்காலத்தை நம் கண் முன் படைத்தனர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொடக்கவுரை, இறுதி சிறப்புரை ஆகியவை ஒலி – ஒளிப் பதிவாக ஒலித்துச் சிறப்பித்தது. வரலாற்றையும், நமது உழைப்பின் பெருமைகளையும், நமது கடமைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

பேராசிரியர் நொபோரோ காரசிமா அவர்களின் நூலில் இருந்து, நமது வரலாற்றைச் சொன்ன பதிவு ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டது .

மாநாட்டிற்காகச் சிறப்பாக உழைத்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றி. ரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன், வி.குன்றாளன், அ.கோவிந்தபாசம், வி.சி.வில்வம், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட தன்னார்வலர்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கின்றோம். அருமையான ஜப்பானியத் திருமண விருந்து போல, ஜப்பானிய உணவைக் கொடுத்தார்கள். கூடவே தமிழிசையுடன் விழா நிறைவு பெற்றது!

– சோம. இளங்கோவன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *