சென்னை, நவ. 6- சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு இயந்திரம் பழுதடைந்து மூழ்கியதால் ஆந்திரப் கடற்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மீனவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல மைச்சர் விஜய், அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29 அன்று விசைப்படகில், மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற கா.பக்கிரிசாமி (எ) சூர்யா (49), ம.குப்பன் (48), சே.மோகன் (47), கா.ராஜேஷ் (52), ஆ.முருகன் (48), லா.குப்புசாமி (58), சி.விஜயகாந்த் (44), அ.அரவிந்த் (40), மு.நாராயணன் (57) ஆகிய 9 மீனவர்கள் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையால் வழங்கப்பட்ட புயல் மற்றும் வானிலை முன்னெச் சரிக்கையினால், ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக இருந்தனர்.
இந்நிலையில், நவம்பர் 2 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் இயந்திரம் செயலிழந்ததாகவும், காணாமல் போன படகில் இருந்த மீனவர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் மற்றொரு விசைப்படகில் இருந்த மீனவர்களுக்கு நவம்பர் 3 அன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காணாமல் போன படகில் இருந்து எவ்வித தகவல் தொடர்பும் கிடைக்கப் பெறாததாலும், அவர்களது இருப்பிடம் குறித்த எவ்வித தகவலும் தெரியாததாலும், சென்னை மீன்பிடித் துறைமுக மீன்பிடிப் படகுகள், ஆந்திர மாநில மீன்பிடிப் படகுகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காணா மல் போன மீனவர்களின் நிலையை அறிய, ஆந்திர மாநில அதிகாரிகள் மற்றும் காணாமல் போன மீனவர் களின் குடும்பங்களுடன் ஒருங் கிணைந்து செயல்படுமாறும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத் தப்பட்டது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத் தில் உள்ள கோத பட்டினம் கடலோரத்தில் மோகன், முருகன், விஜயகாந்த் ஆகிய மீனவர்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற துயரமான செய் தியை அறிந்து மிகுந்த வருத்த மும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், மீட்கப்பட்டுள்ள இரண்டு இறந்த உடல்களை அடையாளம் காணும் பணியி னையும், காணாமல் போன எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணி யினையும் விரைவு படுத்துமாறு உத்தர விட்டுள்ளேன்.
இந்த நிகழ்வில் உயிரிழந்த மீனவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்குத் தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும், அதில் தலா ரூ. 2 லட்சம் உடனடியாக வழங்கிடவும், அவர்களது உடல்களை அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற் கொள்ளவும் உத்தர விட்டுள் ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் உடல்கள் ஆந்திரக் கடற்பகுதியில் மீட்பு; 4 பேரைத் தேடும் பணி தீவிரம்
Leave a Comment
