“தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது” இது பெரியார், அண்ணா, கலைஞரின் மண்! கனிமொழி எம்.பி. ஆவேசம்!

2 Min Read

சென்னை, ஏப்.9- தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒரு பிடி மண் கூட கிடைக்காது என நாட்றம்பள்ளியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜோலார்பேட்டை தொகுதியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் நேற்று (8.4.2026) வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனால், இந்த தேர்தலில் நாங்கள் தைரியமாக வாக்கு கேட்டு வந்துள்ளோம். திமுக அரசின் நலத்த திட்டங்களால் ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு வீடும் பயனடைந்துள்ளது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் தேர்தலுக்கு, தேர்தல் மேடையில் கூடி வாக்கு கேட்கிறார்கள். தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேரும் ஒரு அணியில் திரண்டு எதிரணியிலேயே நிற்கின்றனர்.இந்த தேர்தல் தமிழ்நாட்டை எதிர்க்கக் கூடியவர்களுக்கும், தமிழ்நாட்டுக்குமான தேர்தல்.

தமிழ்நாட்டில் இருந்து நிதியை பெறும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை தராமல் பீகார், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு ஒதுக்குகின்றனர்.மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.3,600 கோடி நிதி தருவதாக கூறுகின்றனர்.

தண்ணீருக்கான திட்டத்துக்கு கூட பணம் தரவில்லை. பிரதமர் மோடி வடஇந்தியாவில் தேர்தல் நடக்கும்போது தமிழ்நாட்டில் வடஇந்தியர்களை மோசமாக நடத்துகிறார்கள் என கூறுகிறார். தமிழ்நாட்டுக்கு வந்தால், நான் தமிழனாக இருக்க ஆசைப்படுகிறேன் என கூறுகிறார்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் தங்களது நிலையை, சாயத்தை மாற்றக்கூடியவர்கள் தான் எதிரணியில் இருப்பவர்கள். கடந்த மக்களவை தேர்தலில் பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறினார்.ஆனால், இந்த தேர்தலில் அதனை மறந்துவிட்டார். அவருக்கு தெரிந்தது துரோகம் ஒன்றுதான்.

தமிழ்நாட்டுக்கு துரோகம், தன்னை உருவாக்கிய கட்சிக்கு துரோகம், அவருக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த ஒ.பி.எஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். இதையடுத்து அவர் தமிழ்நாட்டை காக்க நம்முடன் இணைந்துள்ளார். அவரிடம் இருந்து உண்மையை புரிந்துக்கொண்டு நம்மிடம் வந்து சேர்ந்தவர்கள் ஏராளம்.

துரோகங்களையே தொடர் கதையாக செய்யக்கூடியவர் பழனிசாமி. பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சியை பாஜக எடுத்துக் கொள்ளும். இது பெரியார், அண்ணா, கலைஞரின் மண். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது. திமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் அமோக ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *