கேரளத்தில் ரூபாய் 2 கோடி லஞ்சம் கேட்டதாகப் புகார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்மீது வழக்குப்பதிவு செய்ய அரசு அனுமதி!

- Advertisement -

திருவனந்தபுரம், நவ. 5- கேரளத்தில் 2006-இல் சாலை விரிவாக்கப் பணியில் ஞானேஷ் குமார் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் வழக்குத் தொடர மாநில அரசு அனுமதி அளித் துள்ளது.

கேரள மாநிலத்தில் 2006-இல் பொதுப்பணித் துறைச் செயலாளராக ஞானேஷ் குமார் (தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர்) இருந்து வந்தார். 2006-இல் இவர் பணியில் இருந்த காலத்தில் திருவனந்தபுரம் – கோட்டயம் இடையே சாலை விரிவாக்கப் பணியும் நடந்தது. இந்தப் பணிகளின்போது சாலை ஒப்பந்தத்துக்கான ரசீது வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக சாலை ஒப்பந்ததாரர் சாஜன் புகார் அளித் துள்ளார்.

திருவனந்தபுரம்-கோட்டயம் இடையே எம்.சி. சாலை விரிவாக்கப் பணி நடந்து வந்தது. இதனை கே.எஸ்.டி.பி. என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானேஷ் குமார் மீதான புகாரையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது தொடர்பாக மாநில அரசிடம் லஞ்ச ஒழிப்புத் தனிப்பிரிவு அனுமதி கோரியது. இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, இதே காலகட்டத்தில் மாநில போக்குவரத்துத் திட்டத்தில் பணியாற்றிய மலேசியாவை சேர்ந்த பொறியாளர் லீ சீ பீன் தற்கொலை செய்து கொண்டார். மேலும், அவரின் தற்கொலைக் குறிப்பில் அப்போதைய பொதுப்பணித் துறைச் செயலாளர் ஞானேஷ் குமாரின் (தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர்) பெயர் இடம்பெற்றிருந்தது. மலேசிய நிறுவனம் சேர்ந்திருந்த இந்தச் சாலைப் புனரமைப்புத் திட்டத்துக்கு நிதியை விடுவிக்க லஞ்சம் கோரியதாகவும், பணம் செலுத்துவதில் தாமதம் என்ற குற்றச்சாட்டுகளும் தற்கொலைக் குறிப்பில் இருந்தன.

இந்த நிகழ்வு தொடர்பாக விசா ரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஞானேஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் ஒன்றிய அரசுப் பணியிலும் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசா ரணையும் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், 2006-இல் கிடப்பில் போடப்பட்ட ஞானேஷ் குமார் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க கேரள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும், 2006-இல் இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையின் அனைத்து கோப்புகளையும் சமர்ப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்துவரும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட மமதா தரப்பு திரிணமூல் காங்கிரஸும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பழைய வழக்கின் விசாரணை மீண்டும் முடுக்கிவிடப்பட்டது மற்றும் புதிய வழக்குப்பதிவும் ஞானேஷ் குமாருக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *