டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* டில்லியில் ‘இண்டியா’ கூட்டணியின் மாபெரும் பேரணி – மோடி, அமித்ஷா, ஞானேஷ் குமாருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்படுவார்; மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என ராகுல் காந்தி எச்சரித்தார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்.அய்.ஆர் நடவடிக்கையால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது – மம்தா குற்றச்சாட்டு! பாஜக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து எஸ்.அய்.ஆர். நடவடிக்கையைப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய மம்தா, ஜனநாயகத்தையும் மக்களின் வாக்குரிமையையும் பாதுகாக்க இந்தியா கூட்டணியுடன் இணைந்து போராடுவோம் என்றார். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்க வேண்டும் என சரத்பவார் ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆறு மாதங்களில் விலைவாசி உயர்வைத் தவிர தவெக அரசு எதையும் செய்யவில்லை – எடப்பாடி பழனிசாமி கண்டனம். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
தி இந்து:
* பீகாரில் சுயேச்சை மேலவை உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு தாவல் – பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம். பன்சிதர் பிரஜ்வாசி, ராகுல் ராஜ் ஆகிய இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேஜஸ்வி கோரிக்கை விடுத்துள்ளார். முதலில் பாஜக அவர்கள் கட்சியில் இணைந்ததாக அறிவித்து, பின்னர் ஆதரவு மட்டுமே அளித்ததாக மாற்றிக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “ஞானேஷ் குமார் இனியும் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் நீடிக்கக் கூடாது” – திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் வலியுறுத்தல். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் சாகரிகா கோஷ் வலியுறுத்தினார். அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
– குடந்தை கருணா
