குடியாத்தத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட அய்வர் கைது ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல்

2 Min Read
- Advertisement -

வேலூர், நவ.01 மேற்கு வங்காளத்தில் இருந்து கள்ளநோட்டுகளை எடுத்து வந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புழக்கத்தில் விட்ட 5 பேரை காவல்துறயினர் அதி ரடியாக கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளூர் பகுதியைச் சேர்ந் தவர் ரபீக்அகமது (வயது 46). இவர் தரணம்பேட்டை பகுதியில் உணவகப் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ரபீக்அகமது இணய வழியில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் பொருளை வாங்கும்போது, அதனை கொடுக்க வந்தவரிடம் ரபீக் அகமது இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் டெலிவரி கொடுத்த நபர் குடியாத்தம் காவல் துறையினர் ரகசியமாக தகவல் தெரிவித்தார்.

கள்ளநோட்டுகள் பறிமுதல்

இதையடுத்து ரபீக் அகமது விடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் குடியாத்தம் பகுதியில் வசிக்கும் ஜூபேர் அகமது(52) என்பவரிடம் கள்ளநோட்டுகளை வாங் கியதாக தெரிவித்தார். அதன்பேரில் ஜூபேர் அகமதுவை காவல்துறயினர் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறி முதல் செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆம்பூர் கோபால்(47), பேரணாம் பட்டு காமராஜ்(48) ஆகி யோர் கைது செய்யப் பட்டு ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டுகள் கைப்பற்றப் பட்டன.

தொடர் விசாரணை யில், ஆம்பூரைச் சேர்ந்த பாபு(65) என்பவர்தான் கள்ளநோட்டுகளை சப்ளை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பாபு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் கள்ளநோட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென் றவர் என்பதும், அங்கிருந்து கள்ள நோட்டுகளைக் கொண்டு வந்து புழக்கத்தில் விட் டதும் விசாரணையில் அம் பலமானது.

இந்த வழக்கில் அதிரடியாக கைது செய் யப்பட்ட 5 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *