காரைக்குடியில் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்து, செந்தமிழ் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, மீ.சு. உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி செய்து ஓய்வு பெற்ற புலவர் மாமணி ஆ.பழநி அவர்கள் காப்பியம், கவிதை, உரைநடை, செய்யுள் நாடகம் மற்றும் பல்வேறு தமிழ் நூல் களை எழுதியதுடன், பல போட்டிகளில் பட்டங்கள், பரிசுகள், பொற்கிழிகள் என புகழுடன் பாராட்டையும் பெற்றவர்.
கடந்த ஆண்டு இவருடைய 17 தமிழ் நூல்களை தமிழ்நாடு அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டு பரிவுத் தொகையாக ரூபாய் 10 லட்சம் பொற்கிழி வழங்கியது. உலக அரங்கில் தமிழுக்கு செம்மொழி தகுதி பெறுவதற்கு இவருடைய உழைப்பு அதிகமாகும்.
மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காரைக்குடி வரும் சமயத்தில் புலவரின் இல்லம் சென்று நலம் விசாரிப்பார். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை தொழில்நுட்பக்கல்லூரியில், பெரியார் உயராய்வு மய்யம் சார்பில் “கம்பனின் மறுபக்கம் நூலினைப் பாராட்டியதுடன் பொற்கிழியும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெற்றவர்கள் அவரின் நினைவு நாளான (அக்-31) நேற்று மாலையில் காரைக்குடியிலுள்ள “அனிச்சம் இல்லத்தில்” கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள் பலரும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கண்டனூர் நாராயணன், அறக்கட்டளைத்தலைவர் சாமிதிராவிடமணி, லெட்சுமி பிரிண்டர்ஸ் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
