திருப்பூரில் பின்னலாடைத் தொழில் முடக்கம்: நவ.8 ஆம் தேதிக்குப் பிறகு போராட்டம் நடத்த முடிவு

2 Min Read
- Advertisement -

திருப்பூர், நவ.1  திருப்பூரில் பின்னலாடைத் தொழில் எதிர்கொண்டுள்ள நெருக்க டிக்குத் தீர்வு காண வலியுறுத்தி, நவ.8 ஆம் தேதிக்குப்  பிறகு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்த அனைத்துத் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று (31.10.2026)  நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலை வர் எம்.பி.முத்து ரத்தினம் பேசிய தாவது:

திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு, சாயமிடும் கட்டண உயர்வு ஆகியவற்றால் உற்பத்திச் செலவு 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் புதிய ஆர்டர்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் தொழி லாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் திருப்பூரில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக உள்ளன.

ஏற்கெனவே 50 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எஞ்சியுள்ள நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் அரசை எளிதில் அணுக முடிகிறது. ஆனால், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்த ரத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதி களால் அரசை அணுகுவதில் சிக்கல் உள்ளது.

எனவே, திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர் வாயிலாக, தமிழ்நாடு முதல மைச்சரிடம்  தங்களது கோரிக்கைகளைக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நவ.8 ஆம் தேதிக்குப்  பிறகு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் டிரேடர்ஸ் அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட செக்கிங், அயர்னிங், பேக்கிங் உரிமையாளர்கள் சங்கம், நூற்பாலை உற்பத்தியாளர்கள் சங்கம், பாலிபேக் உற்பத்தியாளர்கள் சங்கம், லேபிள் அசோ சியேஷன், அட்டைப்பெட்டி உற்பத்தி யாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 40 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *