‘புனித’ யாத்திரையா, உயிர் பறிக்கும் மாத்திரையா?

- Advertisement -

உத்தரகாண்ட், அக்.31 உத்தரகண்ட் மாநி லம் பத்ரிநாத்திலிருந்து பக்தர்க ளுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த விமானி உள்பட 6 பேர் பலியாகினர்.

பத்ரிநாத்திலிருந்து 5 பக்தர்களுடன் நேற்று (30.10.2026) பிற்பகல் புறப்பட்ட டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஜோஷிமத் அருகே மலைச்சரிவில் மோதி விபத்துக்குள்ளானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

பத்ரிநாத் மற்றும் ஜோஷிமத் இடையே உள்ள விஷ்ணுபிரயாக் பகுதியில் ஹெலி காப்டர் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்திய ராணுவத்திடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *