தமிழ்நாட்டில் இன்று சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

3 Min Read
- Advertisement -

பசும்பொன், அக்.31– ‘‘தமிழ்நாட்டில் இன்று சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும். தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்!’’ என்றும்,  ‘‘இந்த ஆட்சி எப்போது ஒழியும்?’’ என, வாக்க ளித்தவர்கள் எல்லாம் ஏங்கும் நிலைதான் இன்று உள்ளது’’ என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நேற்று (30.10.2026), பசும்பொன்னிற்குச் சென்றிருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

கேள்வி: தமிழ்நாட்டின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

பதில்: உங்களுக்குத் தெரியாமல் எதுவும் இல்லை; உங்களுக்கே எல்லாம் தெரிந்தி ருக்கும். இருந்தாலும் கேட்கிறீர்கள். இந்த ஆட்சி வர வேண்டும் என்று விரும்பி வாக்களித்தவர்கள் எல்லாம், இன்றைக்கு “இந்த ஆட்சி எப்போது ஒழியும்?” என்ற நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. நீங்களே சமூக வலைதளங்களில் எல்லாம் தொடர்ந்து பார்த்திருப்பீர்கள்; அந்தச் சமூக வலை தளங்களில் எல்லாம் மக்கள் என்னென்ன பேட்டிகள் கொடுக்கிறார்கள்? என்பதையும் பார்த்திருப்பீர்கள். விலைவாசி எந்த அளவுக்கு விஷம் போல உயர்ந்து போய்க்கொண்டிருக்கிறது! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. அதே போன்று, பாலியல் வன்முறை.

சினிமாவை உண்மை என நம்பி ஏமாந்த மக்கள்!

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சிறைச்சாலையில் இருந்த கைதிகள் எல்லாம் கூட தப்பித்து ஓடக்கூடிய நிலை இன்றைக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, சட்டம், -ஒழுங்கும் இன்றைக்குச் சந்தி சிரிக்கிறது. மக்களும் பல துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறுமிகள் இன்றைக்குப் பாலியல் கொடு மைக்கு ஆளாக்கப்படுவது மட்டுமல்லா மல், திடீர் திடீரென்று காணாமல் போகக்கூடிய செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டி ருக்கின்றன.

சினிமாவில் அவர் கதாநாயகனாக நடித்ததை நம்பி, அவர் கதாநாயகனாகச் செயல்படுவார் என்று நம்பி வாக்களித்த மக்கள் எல்லாம் இன்றைக்கு ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

கேள்வி: உங்கள் ஆட்சியில் அடிப்படை வச திகள் எல்லாம் நன்றாக இருந்தது… இப்போது அதில் எல்லாம் பிரச்சினை வந்து விட்டதே?

பதில்: அதான் சொன்னேனே, நாங்கள் சொன்னதையெல்லாம் செய்துவிட்டோம்; நாங்கள் செய்ததையெல்லாம் சொன்னோம். அவர் வந்தபிறகு எதுவும் நடக்கவில்லை. அதைப்பற்றி எல்லாம் இந்த முதலமைச்சர் கவலைப்படவில்லை. அவர் ஏதோ ‘கோட்-சூட்’ போட்டுக்கொண்டு, ஏதோ அலுவலகத்திற்கு வேலைக்குப்போவது போல காலையில் 9, 10 மணிக்கு  சென்னை கோட்டைக்கு வந்து விட்டு, மாலை 5 மணிக்கெல்லாம் வீட்டிற்குப் போய்விடுகிறார். இதுதான் நிலவரம்.

கேள்வி: இடைத் தேர்தலில் சீமான் போட்டியிடுகிறார். அவருக்கு உங்கள் ஆதரவு உண்டா?

பதில்: தேர்தல் தேதி அறிவிக்கப்படட்டும்.

கேள்வி: முன்னாள் முதலமைச்சராக த.வெ.க.வின் 5 மாத கால ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் என்ன?

பதில்: ‘0’

கேள்வி: உங்களுக்கே வரும்போது பாது காப்பில்லையே!

பதில்: நான் அதைப் பற்றியெல்லாம் கவ லைப்படுவதில்லை. எங்களுக்குக் கழகம் இருக்கிறது; கட்சித் தோழர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இருக்கிறார்கள் அந்தப் பாதுகாப்புப் போதும் எனக்கு!

கேள்வி: அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு பேரும் கூட்டணியில் இருப்பதாகத் தமிழ்நாடு அமைச்சர்கள் தொடர்ந்து சொல்கிறார்களே?

பதில்: அப்படியா?

‘மிசா’வையே
சந்தித்த எங்களுக்கு– இதெல்லாம் ஒன்றும் பெரிதல்ல!

கேள்வி: தி.மு.க. நபர்கள் மீதான கைது நடவடிக்கைகளைத் தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

பதில்: சட்டரீதியாக நாங்கள் எதிர்கொண்டி ருக்கிறோம். நீதிமன்றத்திற்குச் சென்று நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று நிரூபிப்போம். அந்த அடிப்படையில்தான் எங்க ளுடைய பணி நடந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

நாங்கள் அவசரநிலையை எதிர்த்தவர்கள்; ‘மிசா’ சட்டத்தைப் பார்த்தவர்கள், ‘தடா’ சட்டத்தைப் பார்த்தவர்கள், ‘பொடா’ சட்டத்தைப் பார்த்தவர்கள். இதெல்லாம் எங்க ளுக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. சந்திக்க வேண்டிய நேரத்தில்,சந்திப்போம்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *