ராதாபுரம் கிராமத்தில் பெரியார் பள்ளி என்.சி.சி. சாரணர் மற்றும் சாரணியர்களின் இயக்க மாணவர்களின் சமூக சேவை முகாம்!

- Advertisement -

ஜெயங்கொண்டம், அக். 31- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி. சாரணியர் மற்றும் சாரணர் இயக்க மாணவ, மாண வியர் பங்கேற்ற இரண்டு நாள் சிறப்பு சமூக சேவை முகாம் ராதாபுரம் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சாரணர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தினர்.
மேலும், பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மையைப் பேணுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்.இம்முகாம் மாணவர்களுக்கு வெறும் தூய்மைப் பணியாக மட்டு மல்லாமல், சேவை மனப்பான்மை, தலைமைப் பண்பு, குழு ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூக அக்கறை போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் பயிற்சிக் கள மாகவும் அமைந்தது.பள்ளி மாணவர்கள் வகுப்பறைக் கல்வியோடு நின்றுவிடாமல், சமூக நலனிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இம் முகாம் எடுத்துரைத்தது. “நாம் வாழும் இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பதே சமூகத்திற்குச் செய்யும் சிறந்த சேவை!”பெரியார் பள்ளி மாணவர்களின் இத்தகைய சமூகப் பங்களிப்பு கிராம மக்களிடையே பாராட்டைப் பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *