மறைவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

 

சுயமரியாதைச் சுடரொளி வை.சு.அரங்கநாதன் மகனும், விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர் அரங்க.பரணிதரன் தம்பியுமான அரங்க.ஸ்டாலின் காலமானார் . தகவல் அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரங்க.பரணிதரனிடம்  தொலைபேசியில் இரங்கல்தெரிவித்துஆறுதல் கூறினார்

* * * * *

மறைவு

கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் காட்டுப்பட்டி சுயமரியாதைச் சுடரொளி சிதம்பரம் அவர்களின் மருமகளும், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக மேனாள் பொறுப்பாளர் ஊற்றங்கரை சித.அருளின் வாழ்விணையருமான சித. வெ.பானுமதி ஆசிரியை (வயது 58) அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.  அம்மையார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம். 20.9.2026 – ஞாயிறு 12.00 மணியவில் கிருட்டினகிரி  மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் கழகத்தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

* * * * *

மறைவு

பெங்களூர் லிங்கராசபுரம் மேனாள் குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் ஆ.கமலக்கண்ணனின் வாழ்விணையர் உஷாதேவி (வயது 74) உடல் நலமின்மையால் 17.9.2026 மாலை மறைவெய்திவிட்டார். பெங்களூர் பகுதிக்கு இன்றளவில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கிட திட்டமிட்டு செயல்பட்டவர். பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கியவர். அவரின் இணையர் மறைவிற்கு கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் அவருக்கும், அவரது மகள் மற்றும் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *