அசோகச் சக்கரம் முதல் ஒபெலிஸ்க் வரை மூடநம்பிக்கைகளை அறுத்தெறிந்த அறத்தின் சான்றுகள்!-புதூரான்

3 Min Read
- Advertisement -

மனிதர்கள் தங்கள் நம்பிக்கைகளை, கல் போன்ற அழியாத பொருட்களில் பொறித்து வைத்தனர். பிற்காலத்தில் இவை வருமானத்திற்கான வழியாக கொண்டு சில கூட்டம் இறைவழிபாட்டு அடையாளங்களாக மாற்றிவிட்டது.

உலகின் பல பழைமையான நாகரிகங்கள் ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்குவதை விட, சமூக ஒழுக்கம், தர்மம், மற்றும் நீதியைப் பறைச்சாற்றுவதற்காக மாபெரும் அடையாளங்களை நிறுவினர்.

எகிப்து (Egypt) – ஒபெலிஸ்க் (Obelisk)

இது ஒரு ஒற்றைக் கல்லால் ஆன, கூர்மையான முனையைக் கொண்ட தூண்.  பிற்காலத்தில் சூரியக் கடவுளுக்கானது என்று ஆய்வாளர்களால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் நான்கு பக்கங்களிலும் உள்ள சித்திர எழுத்துகள் பெரும்பாலும் அந்த மன்னனின் வெற்றிகள், அவரது ஆட்சித் தர்மம் மற்றும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளைக் குறிப்பிடுகின்றன.   அதிகாரம் மற்றும் நீதியின் அடையாளமாக நின்றது. சித்திர எழுத்துகளில் எங்கும் இறைவன் தொடர்பான மந்திரங்களோ அல்லது குறிப்பிட்ட கடவுளராக கருதப்படும் எந்த ஒரு எகிப்திய வழிபாட்டு தெய்வங்களின் பெயர்களோ உருவங்களோ இல்லை

கட்டுரை, ஞாயிறு மலர்

கிரீஸ் (Greece) – விங் ட் ஸ்பிங்க்ஸ் (Winged Sphinx)

கிரேக்கக் கலாச்சாரத்தில் ஸ்பிங்க்ஸ் என்பது ஒரு சிம்ம உடல், மனிதத் தலை மற்றும் பறவையின் இறக்கைகளைக் கொண்ட ஒரு உருவம். இது புதிர்கள் மற்றும் ஞானத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இது மனிதர்களின் அற்வாற்றலை சோதிக்கும் ஒன்றாக உள்ளது.

குறிப்பாக ‘தீப்ஸ்’  நகர நுழைவாயிலில்  உள்ள நீதிபதி கையில் உள்ள பெரிய சொங்கோலின் மேல் புறத்தில் இந்த அடையாளம் பொறித்திருக்கும் அவர்  நகரத்தின், உள்ளே வருபவர்களுக்கு அறநெறி சார்ந்த கேள்விகளைக் கேட்டு அவர்களின் அறிவைச் சோதிப்பார்,  இதற்கு காரணம் நகரத்திற்குள் செல்லும் புதிய நபர்கள் குழப்பம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளைக் உருவக்கி விடக்கூடாது என்பதற்காக அவர் புதிய நபர்களின் அறிவைச் சோதிப்பார்.  பின்னர் இதுவே கல்தூணின் மேலே பொறிக்கப்பட்டது. அதாவது கடவுளை விட, மனித அறிவையும் அதன் பொறுப்பையும் வலியுறுத்தியது.

கட்டுரை, ஞாயிறு மலர்

பெர்சியா (Persia) – இரண்டு தலை மாடு கொண்ட தூண்

இது பெர்சியப் பேரரசின் (தற்போதைய ஈரான்) தலைநகரான பெர்செபோலிஸில் காணப்பட்ட மாபெரும் தூண் வகைகளில் ஒன்றாகும். வலிமை, உற்பத்தித் திறன் மற்றும் அமைதியின் அடையாளமாக எருதுகள் கருதப் பட்டன. இரண்டு எருதுகள் ஒரே உடலில் பிணைக்கப் பட்டிருப்பது போல இருப்பது, பேரரசின் ஒற்றுமையையும், அது வழங்கும் பாதுகாப்பையும் குறித்தது. இது மன்னனின் நீதியான ஆட்சியை மக்களுக்கு நினைவுபடுத்தியது. மேலும் இந்த தூண்களின் சித்திர எழுத்துகள் உள்ளது. இந்த எழுத்துக்கள் அனைத்தும் மக்களின் நேர்மை மற்றும் அரசரின் அறம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ளது.

இந்தியா அசோகச் சக்கரம் கொண்ட தூண்

இந்தியாவில் முக்கியமான மற்றும் ஆழமான பொருளைத் தரும் சின்னம் இது. பேரரசர் அசோகரால் அமைக்கப்பட்ட இந்தத் தூண்களின் உச்சியில் நான்கு சிங்கங்கள் மற்றும் தர்மச்சக்கரம் அமைந்திருந்தது. இது ஒரு மதச் சின்னத்தை விட, ‘தர்மம்’ அல்லது ‘அறநெறி’யின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. “வாய்மையே வெல்லும்” என்ற செய்தியை இது பறைசாற்றியது.

கட்டுரை, ஞாயிறு மலர்

நேர்மை, கருணை, அஹிம்சை போன்ற மனித குலத்திற்குத் தேவையான நல்வழிகளை இது போதித்தது. மற்ற அடையாளங்கள் பெரும்பாலும் வழிபாட்டுக்குரியவையாக மாறியபோதும், அசோகச் சக்கரம் இன்றும் இந்தியாவின் தேசியச் சின்னத்தில் இடம்பெற்று, மனிதகுலத்திற்கு அறநெறியை நினைவூட்டி வருகிறது.

ரோம் (Rome) – ரோமானியத் தூண் (Roman Column)

ரோமானியர்கள் பெரும்பாலும் தங்கள் வெற்றிகளைக் கொண்டாடுவதற்காக இதுபோன்ற மிகப் பெரியதான தூண்களை எழுப்பினர். அதன் உச்சியில் மன்னரின் சிலையோ அல்லது பிற சின்னங்களோ இருக்கும்.

இது பேரரசின் அதிகாரத்தையும், அதன் சட்ட அமைப்பையும் பறைசாற்றியது. இது மக்களின் ஒழுக்கம் மற்றும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

கட்டுரை, ஞாயிறு மலர்

கடவுளை மய்யப்படுத்திய மத வழிபாட்டுத் தலங்கள் உருவாவதற்கு முன்பே, தர்மம், நீதி, ஞானம் மற்றும் சமூக ஒழுக்கம் போன்ற உன்னத நெறிமுறைகளைப் பறைச்சாற்றுவதற்காக பழங்கால நாகரிகங்கள் இத்தகைய அடையாளங்களை நிறுவினர். இவை காலத்தைக் கடந்து, இன்றும் நமக்கு நேர்மையான வழியில் நடப்பதற்கான ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அசோகச் சக்கரம் போன்ற சின்னங்கள், மனிதகுலம் முழுமைக்குமான பொதுவான அறநெறியை உயர்த்திப் பிடிக்கின்றன அகழாய்வில் கிடைத்த பலவற்றை வழிபாட்டிற்குறியவைகளாக மாற்றினர், குறிப்பாக இந்தியாவில் சமண பவுத்த மார்க்கத்தின் முக்கியமான அடையாளமாகத் திகழும் எருதை ஆக்கிரமித்து வேதமதம் நந்தி என்று பெயர் சூட்டி பெரிய பெரிய சிலைகளை, குறிப்பாக தென் இந்தியாவில் வைத்து ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருகிறது. ஆனால், அசோகச் சக்கரம் போன்ற அறநெறி அடையாளங்களை வழிபாட்டுக்குரியவையாக இன்றும் மாற்றமுடியவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *