சென்னை, அக். 29- சென்னை யில் நடைபெற்ற ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சென்னைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் போது, மேயர் பிரியாவை மிகவும் மோசமாகவும் அவதூறாகவும் சித்தரித்து முன்னணி செய்தி நிறுவனமான ‘கலாட்டா’ ஒரு காணொலியை வெளியிட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தொடர்கதையாகும் அவதூறுகள்
சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுவது இது முதல் முறை அல்ல. தற்போதைய ஆளுங் கட்சியான தவெக சேர்ந்த நபர்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே மேயர் பிரியாவை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது ஆட்சிக்கு வந்த பிறகும், இதுபோன்ற மட்டமான காணொலிகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக மேயர் பிரியா ஏற்கெனவே காவல்துறையினரிடம் நேரில் சென்று புகார் அளித்தும் கூட, சமூக வலைதளங்களில் இயங்கும் இத்தகைய சமூக விரோதிகள் தங்களின் செயல் பாடுகளை நிறுத்தவில்லை. இதன் பின்னணியில் சில முக்கிய நபர்களின் தூண்டுதல் இருப்பது தெளிவாகத் தெரிவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தக் காரசாரமான சர்ச்சை யையும் எதிர்ப்புகளையும் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த அவதூறு காணொலியை வெளி யிட்ட ‘கலாட்டா’ நிறுவனம் முதன் முறையாக பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்ப தாவது: “இந்த காட்சிப் பதிவு தற்செயலாக வெளியிடப்பட்டதற்கு எங்களது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது தவறுதலாக வெளியாகிவிட்டது; உங்களை அவமதிக்கும் நோக்கம் எங்களிடம் துளியும் இல்லை.
‘கலாட்டா’ எப்போதும் ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலையான தலையங்கக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது, மேலும் அரசியல் கட்சி பேதமின்றி அனைவரையும் சம மரியாதையுடன் நடத்தி வருகிறது.
உங்களுக்குத் தெரியும், நாங்கள் உங்களை எப்போதும் மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறோம், மேலும் கடந்த காலங்களில் இருந்து உங்களுடன் ஒரு சுமூகமான உறவைப் பேணி வருகிறோம். இந்த எதிர்பாராத தவறுக்கும், இதனால் உங்களுக்கு ஏற்பட்ட எந்தவொரு மன உளைச்சலுக்கும் எங்களது உளமார்ந்த மன்னிப்பைக் கோருகிறோம்.”
வலுக்கும் சட்ட நடவடிக்கைக் கோரிக்கை
இருப்பினும், முதலில் அவதூறாகக் காணொலிகளை வெளியிடுவது, பின்னர் எதிர்ப்பு எழுந்ததும் மன்னிப்பு கேட்பது, மீண்டும் சில நாள்களிலேயே அதேபோன்ற காணொலிகளை வெளியிடுவது என்பது ஒரு தொடர்கதையாகவே மாறி விட்டது என்று பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெறும் போலி மன்னிப்புகளோடு இதை விட்டுவிடாமல், பெண் மக்கள் பிரதிநிதியான மேயர் பிரியாவின் கண்ணியத்தைக் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் இத்தகைய நிறுவனங்கள் மற்றும் பின்னணியில் உள்ள நபர்கள் மீது மேயர் பிரியா கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
