டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* முருகனுக்குப் பதிலாக மாநிலங்களவை இடைத் தேர்தலில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பூரியை பாஜக நிறுத்துகிறது! ஒன்றிய அமைச்சர் எல். முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, காலியாகும் இடத்திற்கு முன்னாள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை பாஜக அறிவித்துள்ளது.
* இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தெளிவான வெற்றி இல்லை; அரபுக் கட்சிகள் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பு! பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெறுவதில் பின்னடைவை சந்தித்துள்ளது; அரபுக் கட்சிகளின் ஆதரவு அடுத்த அரசை அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கலாம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வாக்களிக்கும் உரிமை அடிப்படையானது; வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி! டில்லியில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 47 லட்சம் பேரின் பெயர் களை மீண்டும் சேர்க்கும் வழிமுறையை உருவாக்கவும், நீக்கப்பட்டவர்கள் இடம் புதிய படிவங்களை கோருவதற்கு பதிலாக அவர்களின் பெயர்களை மீட்டெடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
* ‘தர்க்கரீதியான முரண்பாடு’ குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என உச்சநீதிமன்றம் விளக்கம்! எஸ்.அய்.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் சட்டபூர்வத்தன்மை குறித்து இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
* நவம்பர் 1-ஆம் தேதி இந்தியா கூட்டணியின் பேரணிக்குப் பெருகும் ஆதரவு: தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான பதவி நீக்க நடவடிக்கையை வலியுறுத்தும் காங்கிரஸ்! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.
* வாக்குத் திருட்டு எதிர்ப்பு பேரணிக்கு முன், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் காங்கிரஸ்! வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, நவம்பர் 1-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இந்தியா கூட்டணிப் பேரணிக்கு முன்னதாக, அக்டோபர் 30-ஆம் தேதி டில்லியில் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
* ஓபிசி ஜாதி பட்டியலை தேர்வு செய்யும் கீழிறங்கும் பட்டியல் (Drop-down Menu) கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது! 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஓபிசி ஜாதிகளை பதிவு செய்ய முன்கூட்டியே தேர்வுப் பட்டியல் வழங்கக் கோரிய மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜாதிப் பெயர்களை தனித்தனியாக உள்ளிடும் நடைமுறையில் தலையிட முடியாது என தெரிவித்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் சட்ட மேலவைத் தேர்தலில் பாட்னா ஆசிரியர் தொகுதியில் பாஜக தோல்வி! கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து அய்ந்து முறை வெற்றி பெற்ற பாஜக ஆதரவு வேட்பாளர் நவல் கிஷோர் யாதவை வீழ்த்தி, ஆர்ஜேடி வேட்பாளர் டாக்டர் சஞ்சீவ் குமார் சிங் வெற்றி பெற்றார்.
தி இந்து:
* புதிய சட்டத்தில் ‘தொழில் நிறுவனம்’ என்பதற்கான வரையறையை எதிர்த்து ஏ.அய்.டி.யு.சி (AITUC) தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்! 2020 தொழில்துறை உறவுகள் சட்டத்தில் உள்ள தெளிவற்ற வரையறை, அறக்கட்டளைகள் முதல் அரசின் இறையாண்மை செயல்பாடுகள் வரை பல நிறுவனங்களுக்கு விலக்களிப்பதாக கூறி ஏ.அய்.டி.யு.சி.யின் தமிழ்நாடு பிரிவு சவால் விடுத்துள்ளது.
தி டெலிகிராப்:
* எஸ்.அய்.ஆர்-அய் ரத்து செய்யவும், வாக்காளர் பட்டியலை மீட்டெடுக்கவும் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை! தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்கவும், தேர்தல் மென்பொருளைத் தடயவியல் தணிக்கை செய்யவும், காகித வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளார்; தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட 97.37 லட்சம் வாக்குகள் குறித்து உச்ச நீதிமன்ற ஆய்வையும் கோரியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நிர்மலா சீதாராமனின் அறிவுரைக்கு ராகுல் காந்தி நான்கு கேள்விகளுடன் பதிலடி! அமித் ஷா இல்லத்தில் டாடா அறக்கட்டளைகள் தொடர்பான சந்திப்பு ஏன் நடந்தது என்றும், “முதல் இடத்தில் உள்ள நெருங்கிய தொழிலதிபர்” டாடா குழுமத்தில் எதைப் பெறப்போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார் தனது நெருங்கிய தொழிலதிபர்கள் 3–4 பேரைத் தவிர, இந்தியாவின் மற்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அரசை ஏற்கெனவே வெறுக்கின்றன; அவர்களைத் தூண்ட வேண்டிய அவசியமில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சனம்.
– குடந்தை கருணா
