சென்னை, அக். 29- மின்நுகர் வோர்களின் புகார்களுக்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னகத்தில் ஏஅய் தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு மய்யம் அமைப் பதற்கான ஒப்பந்தத்தை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் கீழ் பொதுமக்களின் மின்சாரப் புகார்களை 24 மணி நேரமும் கவனித்து வரும் ‘மின்னகம்’ மய்யத்தை, தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, செயற்கை நுண் ணறிவு (ஏஅய்) தொழில் நுட்பத் துடன் கூடிய புதிய கட்டுப் பாட்டு மய்யத்தை அமைப்பதற் கான புதிய ஒப்பந்தத்தை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரியத் தலைமையக வளாகத்தில் உள்ள மின்னகம் மய்யத்திலேயே இந்த புதிய ஏ.அய். கட்டுப்பாட்டு மய்யம் அமையவுள்ளது.
அய்ந்து ஆண்டுகளுக்கான இந்தத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் இணையத்தில் அளிக்கும் புகார்களைக் கண் காணிப்பது, சமூக வலைதளங் களில் பகிரப்படும் குறைகளைத் திரட்டி நிர்வகிப்பது மற்றும் வாட்ஸ்அப் வழியாக களப்பணித் தகவல்களை உடனுக்குடன் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு அதிநவீனப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுமட்டுமின்றி, மின்பாதை களின் செயல்பாடுகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் நவீன வசதியும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீனப் பணிகளை மேற்கொள்ளத் தகுதியுள்ள நிறுவனங்கள் தங்களுடைய தொழில் நுட்பம் மற்றும் விலை தொடர்பான ஆவணங் களைத் தனித்தனியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கான முன்வைப்புத் தொகையாக ரூ.11.70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு அடுத்த மாதத்துக்குள் இந்த டெண்டர் நடை முறைகளை இறுதி செய்ய மின்வாரியம் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஏஅய் தொழில்நுட்ப மய்யம் பயன்பாட்டுக்கு வரும் வரை, பொதுமக்கள் தங்களின் மின்சாரம் தொடர்பான குறைகளை வழக்கம்போல 94987 94987 என்ற கைப்பேசி எண், 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 94987 94981 என்ற வாட்ஸ்அப் எண் ஆகிய தற்போதைய வழிமுறைகள் மூலமாகத் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
