பத்திரிக்கையாளர்கள் அவமதிப்பு!

1 Min Read
- Advertisement -

 

சென்னை, அக்.29 சென்னை கிண்டி யில் உள்ள அரசு அய்.டி.அய். வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சினைடர் எலெக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் நேற்று (28.10.2026) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தி-மக்கள் தொடர்புத்துறையிடம் கேட்டபோது, நாங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. அழைத்தால் மட்டுமே அனுமதி உண்டு என்றனர். செய்தி மக்கள் தொடர்புத்துறை இப்படி சொல்ல, நிகழ்ச்சி நடந்த மேடையில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார். அப்போது பத்திரிகையாளர்கள், ஊடகவி யலாளர்களையும் வரவேற்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் பத்திரிகை யாளர்கள், ஊடகவியலாளர்களை அனுமதிக்க மறுத்துவிட்டு, அவர்களை வரவேற்பது எப்படி சரியாக இருக்கும்? என்பது பத்திரிகையாளர்களின் கேள்வியாக உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *