சட்டம் – ஒழுங்குக் கட்டுப்பாடும், பொது மக்கள் பாதுகாப்பும் ஓர் அரசின் முதன்மைக் கடமை!
படுகொலைகள் – பாலியல் வன்கொடுமைகள் – ஆள் கடத்தல் (குழந்தைகள் உள்பட) – சிறையிலிருந்து தப்பித்தல் – விலைவாசி உயர்வால் வெறுப்புக்கு உள்ளாகும் பிரச்சினைகளிலிருந்து
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
படுகொலைகள் – பாலியல் வன்கொடுமைகள் – ஆள் கடத்தல் (குழந்தைகள் உள்பட) – சிறையிலிருந்து தப்பித்தல் – விலைவாசி உயர்வால் வெறுப்புக்கு உள்ளாகும் பிரச்சினைகளிலிருந்து
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
- சட்டம் – ஒழுங்குக் கட்டுப்பாடும், பொது மக்கள் பாதுகாப்பும் ஓர் அரசின் முதன்மைக் கடமை! படுகொலைகள் – பாலியல் வன்கொடுமைகள் – ஆள் கடத்தல் (குழந்தைகள் உள்பட) – சிறையிலிருந்து தப்பித்தல் – விலைவாசி உயர்வால் வெறுப்புக்கு உள்ளாகும் பிரச்சினைகளிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- வெட்டிக் கொல்வது தொடர்கதையாகி இருக்கிறது!
- கொலை செய்யப்பட்டோர், கொலை செய்தோர் அனைவரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள்!
- செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அன்றாடச் செய்திகளாகின்றன!
- ஓர் அரசுக்கு அழகு!
- மடைமாற்றத் தந்திர வித்தைகளால் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்!
- மக்களின் நலன்களையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதும்தான் ஓர் அரசின் முதன்மைக் கடமை அல்லவா?
சட்டம் – ஒழுங்குக் கட்டுப்பாடும், பொது மக்கள் பாதுகாப்பும், ஓர் அரசின் முதன்மைக் கடமை! படுகொலைகள் – பாலியல் வன்கொடு மைகள் – ஆள் கடத்தல் (குழந்தைகள் உள்பட)– சிறையிலிருந்து தப்பித்தல் – விலைவாசி உயர்வால் வெறுப்புக்கு உள்ளாகும் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பல்களின் மூலம் காலத்தைக் கடத்துவது பெரும் அரசியல் பிழையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கவலைக்குரிய அளவில், தமிழ்நாட்டில் அன்றாடச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன!
மக்களின் பாதுகாப்புக்கும், நிம்மதியான வாழ்க்கைக்குமான சூழல் என்பது கேள்விக் குறியாகி நிற்கிறது.
கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், போதை மருந்து புழக்கங்கள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வரலாறு காணாத மின்வெட்டு (மயானத்தல்கூட), மக்கள் மீதான விலைவாசி ஏற்றத் தாக்குதல் (பலகாரப் பண்டங்கள் முதல் காய்கறிகள் வரை) என நாளும் வரும் செய்திகள் அச்சமூட்டுகின்றன.
வெட்டிக் கொல்வது
தொடர்கதையாகி இருக்கிறது!
தொடர்கதையாகி இருக்கிறது!
தலைநகரே கொலைப் பட்டணம் ஆகும் கொடு மையை நினைத்தால் உள்ளம் குமுறுகிறது.
சென்னையிலேயே அடையாறு இந்திரா நகர் பகுதியில் நேற்று (அக்டோபர் 27) பட்டப்பகலில் ஒரு கொலை நடக்கிறது. காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த ஒருவரை மூன்று பேர் கும்பல் வழிமறித்து வெட்டிக் கொன்றுள்ளது
அதற்கு முதல் நாள் (அக்டோபர் 26) சேலத்தில், புதுரோடு மேம்பாலம் அருகில், அய்ந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டிக் கொலை செய்கிறது.
கடந்த வாரம் (அக்டோபர் 18) சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்.
கடந்த மாதம் திருவொற்றியூரில் ஒருவர், தன் உயிருக்குப் பாதுகாப்பு கோரிய 24 மணிநேரத்திற்குள் (செப்டம்பர் 9 அன்று) நடுச் சாலையில் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்.
அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு (செப்டம்பர் 6), த.வெ.க. நிர்வாகி ஒருவர் பெசன்ட் நகரில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்படுகிறார்.
கொலை செய்யப்பட்டோர்,
கொலை செய்தோர் அனைவரும்
குற்றப் பின்னணி கொண்டவர்கள்!
கொலை செய்தோர் அனைவரும்
குற்றப் பின்னணி கொண்டவர்கள்!
இவையெல்லாம் தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் அல்ல; திடீர் கோபத்தில், ஆற்றாமையில் நடக்கும் கொலைகள் அல்ல. திட்டமிட்டு, நோட்டமிட்டு இக் கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் கொலை செய்யப்பட்டோர், கொலை செய்தோர் அனைவரும் குற்றப் பின்னணி கொண்ட வர்கள். அனைவருமே, காவல்துறையினரின் கண்காணிப்புப் பட்டியலில் இருக்க வேண்டியவர்கள்.
கொலை என்பது சாதாரணமான உணர்வு வடி காலாகிப் போனதோ என்று கவலைப்படும் அளவுக்கு, உணர்வு உந்துதலால் நடக்கும் கொலைகளும் பன்மடங்கு பெருகியுள்ளன; அன்றாடம் மீண்டும் மீண்டும் செய்திகளில் கேட்கும் கொலைச் செய்திகள் ஏதோ இயல்பான ஒன்று போல ஆக்கப்பட்டு, எதிர்க்கட்சிப் பெருந்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதுபோல், மின்வெட்டு, அரிவாள் வெட்டு என்பவை த.வெ.க. அரசின் இரண்டு அம்சங்கள் ஆகிவிட்டன.
செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும்
அன்றாடச் செய்திகளாகின்றன!
அன்றாடச் செய்திகளாகின்றன!
இன்னொரு புறம், செஞ்சி, இராணிப்பேட்டை, சாத்தான்குளம் என்று குழந்தைகள் கடத்தல் நிகழ்வுகள், எண்ணூர், நாகை, திருநெல்வேலி பாலியல் வன்கொடுமைகள், கோவையில் ஜாதி வன்கொடுமையால் மாணவர் தற்கொலை, போதை மருந்துக் கடத்தல்கள், போதை கும்பலுக்கிடையே வன்முறை – கொலை என செய்தித்தாள்களையும், தொலைக்காட்சிகளையும் திறந்தாலே இவைதான் பேசப்படுகின்றன. கடத்தல்களில் போதை மருந்து கடத்தல் போல, குழந்தைகள் கடத்தலும் தொடர்கிறதே!
இதனிடையே புழல் சிறையிலிருந்து இரு கைதிகள் தப்பியோடி, பின்னர் பிடிபட்டனர் என்றொரு செய்தி. அடுத்த சில நாட்களிலேயே நேற்று முன் தினம் (26.10.2026) தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களில் பலரைப் பிடித்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தாலும், உயர் பாதுகாப்பு கொண்ட சிறைகளிலிருந்து, தப்புகின்ற அளவுக்கு எங்கே ஓட்டைகள் இருக்கின்றன?
சிறைத் துறை அமைச்சருக்குப் பொல்லாங்கு பேசுவதற்கே பொழுது சரியாகி விடுகிறது.
ஏதோ அறையில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் தப்பியது போன்று ஓர் அதிகாரியை அடித்துவிட்டுத் தப்பினார்கள் என்று செய்தி வருகிறது. இதுதான் சிறைகளில் இருக்கும் பாதுகாப்பா? என்னும் கேள்வி சாதாரண மக்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது.
மக்களோ அன்றாட வாழ்க்கை குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். விலைவாசி பல மடங்கு உயர்ந்து, அதுவேறு புறம் அச்சுறுத்துகிறது.
ஓர் அரசுக்கு அழகு!
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் முதல மைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனுபவம் வாய்ந்த வர்களை அருகில் அமர்த்திக் கொண்டு, ஆலோசனை பெற வழிகள் இருக்கின்றன. துறை சார்ந்த அதிகாரிகள், திறமை வாய்ந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவர்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்வதுதான் ஓர் அரசுக்கு அழகு!
முதலமைச்சர் மட்டும் பார்க்கவேண்டிய அன்றாட, அவ்வப்போதைய உளவுத் துறை அறிக்கையை, வேறு யார், யாரோ பார்க்க, கேட்டதும், பொறுப்புள்ள கடமை அதிகாரி தரத் தயங்கி நிலையில், முதலமைச்சரே, மற்றவர்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னதாகவும் செய்திகள் உலா வருவது, ஆளுமைக்கு, ஆட்சிக்கு அழகா? அரசியலமைப்புச் சட்ட மரபு மீறியதாகாதா?
ஆய்வு நடத்துகிறோம் என்று ஆங்காங்கே செல்வதும், மக்கள் மத்தியில் ‘ரோட் ஷோ’ நடத்துவதும், அதற்குப் பல கோடி ரூபாய் செலவு செய்வதும் மக்களுக்கு எந்தப் பயனையும் தரப் போவதில்லை.
ஆட்சி நடத்துவதற்குத் தான் மக்களில் ஒரு பகுதியினர் ஆதரவளித்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். வெறும் காட்சிகளுக்காக இல்லை என்பதை ஆள்வோர் புரிந்துகொள்ள வேண்டும்.
மடைமாற்றத் தந்திர வித்தைகளால்
மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்!
மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்!
இந்தப் பிரச்சினைகளில் இருந்தெல்லாம் செய்தி ஊடகங்களைத் திசை திருப்பு, வேறு வேறு பிரச்சி னைகளை முன்னிறுத்துவதும், முன்னாள் அமைச்சர்கள் கைது, அவதூறு வழக்குகள், விசாரணைகள், ரெய்டு கள் என்று சாயமடிக்கும் வேலையைச் செய்வது மக்களுக்கான சரியான பரிகாரம் அல்ல. கைது செய்வதன் மூலம் அவர்கள் குற்றவாளிகள் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்துவிடலாம் என்று யாராவது கருதினால் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய மடைமாற்றத் தந்திர வித்தைகளால் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்.
மக்களின் நலன்களையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதும்தான்
ஓர் அரசின் முதன்மைக் கடமை அல்லவா?
ஓர் அரசின் முதன்மைக் கடமை அல்லவா?
உண்மையான பல பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மேலும், கவலையில் ஆழ்த்தும் வகையில் ஆட்சி யாளர்கள் அலட்சியமாக, ஆணவமாக இருப்பது கண்டனத்திற்குரியது. சட்டம் – ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், மக்களின் நலன்களையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதும்தான் ஓர் அரசின் முதன்மைக் கடமை அல்லவா?
அந்தக் கடமையைச் சரிவரச் செய்யாமல், திசை திருப்பல்களின் மூலமே காலத்தைக் கடத்தலாம் என்று கருதினால், அது பெரும் அரசியல் பிழையாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.10.2026
